புதன்கிழமை 16 ஜனவரி 2019

மஞ்சள் நிறமாக சளி வெளியேறுதல், வாயில் புண்  மற்றும் பல் ஈறுகளில் உண்டாகும் ரத்தக் கசிவு குணமாக

By கோவை பாலா| Published: 20th August 2018 10:39 AM

அறிகுறிகள் : அதிகப்படியான உடல் சூட்டினால் சளி மஞ்சள் நிறமாக வெளியேறும். எதிர்ப்பு சக்தியே தடுமாறும் அளவிற்கு சளி அதிகமாகியுள்ளது என்று பொருள். இதனால் வாயில் புண்ணும், பல் ஈறுகளில் உண்டாகும் ரத்தக் கசிவு  அனைத்தையும் குணமாக்க...

மண்டலம் - நிணநீர் மண்டலம்
காய் - பீர்க்கங்காய்
பஞ்சபூதம் - நீர்
மாதம் - ஐப்பசி
குணம் - உள்முகம்

சத்துக்கள் : நார்ச்சத்து, ‘ஏ’, ‘பி’, ‘சி’ வைட்டமின்கள், தாது உப்புகள் உள்ளன

தீர்வு

பீர்க்கங்காய்  தேங்காய் ஜீஸ்

ஒரு பீர்க்கங்காயை தோலுடன் நன்றாக கழுவி நறுக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் தேங்காயைத் துருவி சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி வைத்துக் கொண்டு காலை மதியம் இரவு என மூன்று வேளையும் 150 மில்லி அளவு எடுத்து வரவும்.

ஒரு வேளை உணவில் பீர்க்கங்காயை தோலுடன் நறுக்கி நீராவியில் வேக வைத்து பின்பு அதனுடன் தேங்காயைத் துருவி பொறியலாக சாப்பிட்டு வந்தால் மஞ்சள் நிறமாக சளி வெளியேறுதல் , வாயில் புண்  மற்றும் பல் ஈறுகளில்  உண்டாகும் இரத்தக் கசிவு  ஆகியவற்றைக் குணப்படுத்தலாம். பின்பு வழக்கமான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com 

Tags : cold body heat உடல் சூடு சளி இருமல் பீர்க்கங்காய்

More from the section

உள் நோயாளிகளுடன் இருப்பவர்களுக்கும் இலவச உணவு
அறுவைச் சிகிச்சையின்றி செயற்கை வால்வு பொருத்தம்: ஓமந்தூரார் மருத்துவமனை புதிய சாதனை
வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து விரைவில் முடிவு: அரசு மருத்துவர் சங்கம்
மனப்போக்கு: மாற்றமில்லாததா? மாற்றக் கூடியவையா?
பித்தப்பைக் கல் கரைய இது உதவும்!