வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

சாப்பிட்ட பின்பு வயிறு பாரமாக உள்ளதா? 

By கோவை பாலா| Published: 06th September 2018 10:39 AM

இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை

காயமே (உடலே) மருத்துவர் !! காய்கறிகளே மருந்து !!!

உணவை மருந்தாக்கு !! மருந்தை உணவாக்காதே !!!

சத்துக்கள் : வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

தீர்வு : கோவைக்காய் (3), முருங்கை விதை (2), பீர்க்கங்காய் (50 கிராம் தோலுடன்) இவை மூன்றையும் மிக்ஸியில் போட்டு மோர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி வடிகட்டி காலை மதியம் மாலை என உணவிற்கு பின்பு அரை மணி நேரம் கழித்து மூன்று வேளையும் குடிக்கலாம். கோவைக் காயையும், நீராவியில் வேக வைத்து பொறியலாக செய்து அவற்றில் தேங்காயை அதிகமாகப் போட்டு உணவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்ளலாம். பின்பு பசித்தால் உணவு எடுத்துக்கொள்ளுங்கள்.

வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

Tags : food bloat stomach stomach pain வயிறு உப்புசம் காய்கறி மருத்துவம் கோவைக்காய்

More from the section

தமிழகத்தில் 21 ஆயிரம் பேருக்கு காசநோய் பாதிப்பு
கூவத்தூர் சம்பவம் எதிரொலி: ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருக்க உத்தரவு
பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான விவகாரம்: விளக்கம் கோரி சுகாதாரத் துறைக்கு நோட்டீஸ்
தோல்வி பற்றிய பயம் இல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? மனநல மருத்துவர் கூறும் அறிவுரை!
முழுமையான வாழ்க்கை உடல் சார்ந்தது மட்டுமே என்று எண்ணாதீர்கள்!