செவ்வாய்க்கிழமை 22 ஜனவரி 2019

சாப்பிடும் நேரத்தில் உண்டாகும் தொடர் விக்கல் நீங்க 

By கோவை பாலா| Published: 12th September 2018 11:38 AM

சத்துக்கள் : வைட்டமின்கள் (ஏ, பி, சி, ஈ மற்றும் கே), கனிமங்கள், கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் ஜிங்க் வளமையாக உள்ளது. மேலும் சவ்வு போன்ற நார்ச்சத்தும் வெண்டைக்காயில் அதிகமாக உள்ளது. 

தீர்வு : பிஞ்சு வெண்டைக் காயை  எடுத்து வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊற வைத்து நன்கு கழுவி, அதன் மேல் உள்ள பகுதியை நன்றாக துடைத்து, நுனி மற்றும் காம்பை நீக்கி, சிறு சிறு துண்டுகளாக வெட்டி, அதனுடன் அரசாணிக்காய் (100 கிராம் தோலுடன்) துருவி, ஒன்றாக கலந்து இவற்றில் நாட்டுச் சர்க்கரை 2 பங்கு சேர்த்து, பிசைந்து ஒரு மணி நேரம் வைத்திருந்து தினமும் 6 முறை சாப்பிட்டு வரவும்.

மதிய வேளை உணவில் வெண்டைக்காய் மற்றும் அரசாணிக்காயை நீராவியில் வேக வைத்து பொறியல் செய்து சாப்பிட்டு வரவும்.

வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

Tags : vitamin hick up stop hick up விக்கல் வைட்டமின் வெண்டைக்காய்

More from the section

முகத்தின் வறட்சி நீங்கவும், தேகம் பளபளப்பாகவும் மாற இது உதவும்!
மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: ஓராண்டில் 5 லட்சம் பேர் பயன்
சிறுநீரக கல் கரைய, சிறு நீரக வியாதிகள் தீர, உடல் வீக்கம் மற்றும் குடல் புண்கள் குணமாக 
செயற்கை மூட்டு உபகரண சர்ச்சை: இழப்பீட்டுக்கு முட்டுக்கட்டை போடும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம்
வெண்பூசணியில் இவ்ளோ நன்மைகளா?