சனிக்கிழமை 23 மார்ச் 2019

தீராத மலச்சிக்கல்  தீர

By கோவை பாலா| Published: 25th September 2018 10:46 AM

 

தீர்வு : முற்றின முருங்கை விதை (10), வெண் பூசணிக்காய் (100 கிராம்), புடலங்காய் (100 கிராம்) இவைகளை நன்றாக கழுவி நறுக்கி மூன்றையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் அல்லது மோர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி காலை மற்றும் இரவு வேளை உணவாக குடிக்கவும். பின்பு பசித்தால் வழக்கமான உணவு எடுத்துக் கொள்ளலாம்.

முருங்கைக் கீரை சிறிதளவும், மணத்தக்காளிக் கீரை காயுடன் சிறிதளவும் எடுத்து இரண்டையும் நீராவியில் ஒன்றாக வேக வைத்து பொரியலாக காலை மற்றும் மதியம்  வேளை உணவில் அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.

பீட்ரூட் சாறு (அரை டம்ளர்), தண்ணீர் (அரை தம்ளர்) இவை இரண்டையும் கலந்து இரவு உறங்க போவதற்கு முன்பாக குடித்து வந்தால் பல மாதங்களாக உள்ள மலச் சிக்கலும், குணமாகும்.

சத்துக்கள் : நார்ச் சத்து, புரதச் சத்து, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து  மற்றும் வைட்டமின்களும் மிக அதிக அளவில் உள்ளன.

வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

Tags : constipation food indigestion முருங்கை விதை முருங்கைக் கீரை வெண் பூசணி

More from the section

33 ஏழைக் குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை
ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு அதிகம்: ஆய்வில் தகவல்
தமிழகத்தில் 21 ஆயிரம் பேருக்கு காசநோய் பாதிப்பு
கூவத்தூர் சம்பவம் எதிரொலி: ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருக்க உத்தரவு
பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான விவகாரம்: விளக்கம் கோரி சுகாதாரத் துறைக்கு நோட்டீஸ்