சனிக்கிழமை 23 மார்ச் 2019

கொழுப்பு கரைந்து உடல் எடையை கணிசமாகக் குறைக்க இதுவொன்றே சிறந்த வழி!

By கோவை பாலா| DIN | Published: 18th February 2019 11:04 AM


 
தேவையான பொருட்கள் : வெங்காயத் தாள் (நறுக்கியது) 500 கிராம் மற்றும் ஒரு கிலோ சுத்தமான நெய்

செய்முறை : வெங்காயத் தாளை பொடியாக நறுக்கி அதனுடன் சிறிது நீர் சேர்த்து அரைத்து சாறு எடுத்து வடிகட்டி, வாணலியில் ஊற்றிக் காய்ச்சி நான்கில் ஒரு பங்காகச் சுண்டியதும் அதனுடன் ஒரு கிலோ நெய்யை சேர்த்து காய்ச்சி இறக்கி வைத்துக் கொள்ளவும்.

இந்த நெய்யை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால், உடல் பருமன் மற்றும் அதிகக் கொழுப்பு போன்ற பிரச்னைகள் தீரும். மேலும் இதய நோய் உள்ளவர்களுக்கு இந்த நெய்  மிகவும் நல்லது. 

நன்னாரி வேரை (100 கிராம் , நெல்லிக்காய் சாற்றில் (500 மில்லி) ஊறவைத்து உலர்த்திப் பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் கொழுப்பு கரையும். இதயம் வலுவடையும்.

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

Tags : weight loss body weight BMI heart care இதயம் உடல் மெலிய உடல் எடை .உடல் பருமன்

More from the section

33 ஏழைக் குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை
ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு அதிகம்: ஆய்வில் தகவல்
தமிழகத்தில் 21 ஆயிரம் பேருக்கு காசநோய் பாதிப்பு
கூவத்தூர் சம்பவம் எதிரொலி: ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருக்க உத்தரவு
பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான விவகாரம்: விளக்கம் கோரி சுகாதாரத் துறைக்கு நோட்டீஸ்