21 ஏப்ரல் 2019

ரத்தம் அதிகம் உற்பத்தியாக உதவும் காபி இது!

By கோவை பாலா| DIN | Published: 14th March 2019 11:32 AM

 
தேத்தான் கொட்டை காபி
 
தேவையான பொருட்கள்

தேத்தான் கொட்டை - 100 கிராம்
தான்றிக்காய் - 100 கிராம்
ஏலக்காய் - 100 கிராம்

செய்முறை : மேற்கூறிய பொருட்களை தனித்தனியாக வறுத்து அதனை தூள் செய்து அனைத்தையும் ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். ஒரு ஸ்பூன் அளவு பொடியை எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் பால் சேர்த்து குடிக்கவும்.

பயன்கள் : இந்த காபியை தினமும் குடித்து வந்தால் உடல் உறுதி பெறும் மற்றும் உடம்பில் ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

Tags : blood platelet food cafe காபி ரத்தம் தேத்தான் கொட்டை காபி

More from the section

நாடு முழுவதும் ஒரே அவசர உதவி எண் 112 : 20 மாநிலங்களில் அமல்
மாநிலம் முழுவதும் தயார் நிலையில் நடமாடும் மருத்துவக் குழுக்கள்
இதை ட்ரை பண்ணுங்க! சருமத்தின் நிறம் மாறுவதை கண்கூடாகப் பார்க்கலாம்!
முக அழகைக் கெடுக்கும் வேனல் கட்டி வராமல் தடுக்க இது உதவும்!
கருப்பைக் கோளாறுகள் மற்றும் வெள்ளைப்படுதல் குறைபாட்டை சீர்செய்யும் பழச்சாறு