வியாழக்கிழமை 21 மார்ச் 2019

‘கோல்ப்பர்ஸ் எல்போ’ - கடுமையான முழங்கை மூட்டு வலி!

By டாக்டர் செந்தில்குமார்| DIN | Published: 05th July 2017 04:51 PM

சுமார் 38 வயது மதிக்கத்தக்க நபர் ஒரு நாள் சாயங்கால வேலையில் முழங்க கை மூட்டு பகுதியில் வலி வருவதாகவும் தனது வேலைக்கு இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும் போது வலி கடுமையாக வருவதாகவும் கூறினார்.

தினமும் சுமாராக 100 கிலோ மீட்டர்கள் தனது இருசக்கர வாகனத்தில் பயணிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார் அவர். பொதுவாக நாங்கள் செய்யும் சில சோதனைகள் மூலம் என்னவென்று ஆய்ந்த போது, முழங்கையின் உள் பக்க பகுதியில் உள்ள தசைகளில் தொட்டாலே கடுமையான வலி இருப்பதை கண்டுபிடிக்க முடிந்தது. எத்தனை நாட்களாக இந்த வலி இருப்பதாக கேட்ட போது, கடந்த ஆறு மாதமாக இருப்பதாகவும் இரண்டு மாதங்களாக அதிக வலி வருவதாவும் கூறினார். எப்படியாவது சரி செய்து விடுமாறும் கேட்டுக் கொண்டார். ஏன் இந்த வலி? எதற்காக வருகிறது? உங்களிடம் ஏதும் பதில் உள்ளதா? இருக்காது, இந்த வலி அதிகமாக யாரையும் பாதிப்பதில்லை. பாதித்தாலும் கடுமையாக சிலரையே தாக்குகிறது.

‘கோல்ப்பர்ஸ் எல்போ’ என்ற கடுமையான முழங்கை மூட்டு வலி சரியாக கடுமையான வைத்தியம் ஒன்றும் தேவையில்லை, வலியோடு வரும் எந்த மனிதனையும் எந்தவிதமான மாத்திரைகளையும் சாப்பிட வைத்து விடலாம் என்ற மருத்துவ கம்பெனிகள் போடும் சதித் திட்டம் உங்களுக்கு மருத்துவர்கள் கொடுக்கும் மாத்திரை சீட்டில் தெரிந்துவிடும். இரண்டு அதிக வீரியம்மிக்க மாத்திரைகள் பரிந்துரைக்கப்படாமல் மருந்து சீட்டு இருக்கவே முடியாது. இது போன்ற வலிகளை பிசியோதெரபி மருத்துவம் கொண்டு எந்த பக்க விளைவுகள் இல்லாமலும் எளிதில் சரி செய்து விட முடியும். இதற்கான காரணங்கள் நோயின் பெயரில் இருப்பதை உணர முடியும்.

அதாவது, நீங்கள் செய்யும் வேலை உங்கள் மணிக்கட்டு மூட்டு அதிகம் இயங்குமாறு இருக்கும் வேலைகளாக இருந்தால் இப்பிரச்னை அதிகமாக வரலாம். கோல்ப் விளையாட்டு வீரர்களை அதிகமாக இந்த வலி தாக்குவதால் இதற்கு கோல்ப்பர்ஸ் எல்போ என்று பெயர் உருவானது. கோல்ப் வீரர்களை அதிகம் தாகும் போது அவர்களால் தொடர்ந்து விளையாட முடியாமல் போகும். இதனை சிறந்த முறையில் மருத்துவம் செய்ய பிசியோதெரபி மருத்துவத்தில் வழி உள்ளது. விளையாட்டு துறையில் ஏற்படும் காயங்களை மட்டுமே படிக்கும் தனித்துறை இருப்பது பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. அவர்களை போன்ற தனிப்பட்ட பிசியோதெரபி மருத்துவ துறையைச் சார்ந்த மருத்துவர்களை அணுகும் போது அவர்கள் கூறும் உடற்பயற்சிகளை செய்யும் போதும் கோல்ப்பர்ஸ் எல்போ போன்ற கடுமையான வலி எளிதில் நம்மிடம் இருந்து விரட்ட முடியும்.

அடிபட்ட தசைகளை லகுவாக்க அல்ட்ரா சவுண்ட் தெரபி மிகவும் உபயோகமாக இருக்கும், வலியின் கால அளவை பொறுத்து கொடுக்கும் கிரையோதெரபி (cryotherapy) அதாவது ஐஸ் கட்டி ஒத்திடம், சில நேரங்களில் சுடு நீர் ஒத்திடம் எது சரியான தீர்வாக இருக்கும் என்பதை கண்டறிந்து தர வேண்டும். இதற்கு நீங்கள் முதலில் பிசியோதெரபி மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றால் நிரந்த தீர்வும் பிரச்னை மீண்டும் வராமலும் தடுக்க முடியும். அதற்கெனவே நாங்கள் தரும் தசைகளை வலுவாக்கும் பயற்சிகளை தொடர்ந்து செய்து வர, முதலில் ரத்த ஓட்டம் சீராகும். பின்னர் தசைக்கு தேவையான சத்துணவால் சரிவிகிதத்தில் கிடைக்கும் போது நிரந்தர தீர்வு கிடைப்பது உறுதி.

தசைகள் வலு பெற, வலி விலகும் என்பது சமீபத்திய ஆய்வுகள் கண்டறிந்த உண்மையாகும். சிகிச்சைக்கு வந்தவர் எல்லா பயிற்சிகளுக்கும் ஒத்துழைப்பு தந்தபடியால், தற்போது வலியில்லாமல் இரண்டு சக்கர வாகனத்தில் அவரால் பயணிக்க முடிகிறது.

T. செந்தில்குமார்,

பிசியோதெரபி மருத்துவர், கல்லூரி விரிவுரையாளர்,

ஆக்ஸ்போர்டு பிசியோதெரபி மருத்துவ கல்லூரி,

சாய் பிசியோ கேர் & க்யூர், பெங்களூர்.

8147349181

More from the section

31. முதுகு வலி என்பது நிரந்தரம் இல்லை!
30. பைசெப்ஸ் ஸ்ட்ரைன் (BICEPS STRAIN) – பகுதி II
மாதவிடாய் நாட்களை வலியின்றி கடக்கப் பெண்கள் என்ன செய்ய வேண்டும்?!
19. காலணிகளுக்கும் கால் வலிக்கும் என்ன உறவு?
18. சுடு நீர் ஒத்தடம்