செவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019

துர்நாற்றத்துடன் மூக்கிலிருந்து சளி வெளியேறுதல் நீங்க

By கோவை பாலா| Published: 11th August 2018 11:29 AM

 

அறிகுறிகள் : உடம்பில் புளிப்புத்தன்மை அதிகமாக இருந்தால் மூக்கிலிருந்து வெளியேறும் சளி துர்நாற்றத்துடன் வெளியேறும். இதிலிருந்து விடுபட..

மண்டலம் - ஜீரண மண்டலம்
காய் - வெண் பூசணிக்காய்
பஞ்சபூதம் - நிலம்
மாதம் - சித்திரை
குணம் - தைரியம்
ராசி / லக்கினம் - மேஷம்

சத்துக்கள் : வைட்டமின் B, C, கால்சியம், பொட்டாசியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்து

தீர்வு : வெண்பூசணிக்காய் தோல் மற்றும் விதையுடன் (100 கிராம்), கத்தரிக்காய் (1) எடுத்து 10 நிமிடம் வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து பின்பு அதனுடன் வெற்றிலை (5), புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை (சிறிதளவு), தக்காளி (1 சிறியது) எடுத்து அனைத்தையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் அல்லது மோர் ஊற்றி நன்றாக அரைக்கவும். தேவைப்பட்டால் சிறிது உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ளலாம். இந்த ஜூஸை காலை மாலை என இருவேளையும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் துர்நாற்றத்துடன் வெளியேறும் சளியிலிருந்து விடுபடமுடியும். பின்பு பசித்தால் வழக்கமான உணவு உட்கொள்ளலாம்.

வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com 

Tags : cold sick tired சளி உடல்நலம் நலம்

More from the section

உங்கள் குரல் இனிமையாக வேண்டுமா? இதை சாப்பிடுங்கள்!
வெண்பூசணியில் இவ்ளோ நன்மைகளா?
ஒரே ஒரு  மிளகு போதும் இந்த குளிர்காலத்தை கடந்துவிடலாம்!
தயிரில் இத்தனை இத்தனை நன்மைகளா?
சூப்பர் டேஸ்டியாக சுண்டல் தயாரிக்க ருசிகர டிப்ஸ்!