வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

உங்கள் தொண்டையில் கீச்கீச்சா? கவலை வேண்டாம் இதோ நிவாரணம்!

By கோவை பாலா| Published: 13th August 2018 10:29 AM

 

அறிகுறிகள் : உடலில் உப்புத்தன்மை அதிகமானால் கல்லீரலிலும் உப்புத் தன்மை அதிகரிக்கும். எனவே கல்லீரலானது அதை சுத்தப்படுத்த வேண்டும். கொஞ்ச நேரம் சாப்பிடடமல் இருக்கச் சொல்லி நமக்கு அறிவுறுத்தும். அதுவே நமக்கு நாக்கில் கசப்பு சுவையாக தெரியும். கசப்புச் சுவை தெரிகிறது என்றால் உணவை உண்ணக் கூடாது என்று அர்த்தம். கசப்பு சுவையான நாக்கு, தொண்டை கரகரப்பு, வாய் மற்றும் பல் ஈறுகளில் உண்டாகும் சூடு மற்றும் எரிச்சல் நீங்க :

மண்டலம் - சிறுநீரக மண்டலம் 
காய் - கத்தரிக்காய்
பஞ்சபூதம் - நிலம்
மாதம் - வைகாசி
குணம் - சகிப்புத்தன்மை
ராசி/லக்கினம் - ரிஷபம்

சத்துக்கள் : வைட்டமின்  B2, C, B6, தையமின், நியசின், மெக்னீசியம், பாஸ்பரஸ், காப்பர், பொட்டாசியம், மங்கனீசு, கால்சியம், இரும்புச் சத்து, போலிக் ஆசிட், நார்ச் சத்து 

தீர்வு : ஒரு கத்தரிக்காயை (வரியுள்ள நாட்டு காய்) எடுத்துக் கொண்டு ஒரு 15 நிமிடம் சுடு நீரில் ஊறப் போட்டு பின்பு எடுத்து நறுக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் பீர்க்கங்காய் தோலுடன் (100 கிராம்), புதினா (சிறிதளவு), எலுமிச்சம் பழம் தோலோடு (அரை), ஒரு தக்காளி, மிளகு(2), கொஞ்சம் மஞ்சள் தூள், தேவையெனில் உப்பு சேர்த்து அனைத்தையும் நன்றாக அரைத்து  ஜூஸாக்கி வடிகட்டி காலை மாலை என இருவேளையும் குடித்து வரவும்.

வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com 

Tags : கல்லீரல் கத்திரிக்காய் body heat liver problem toxin சிறுநீரக மண்டலம்

More from the section

உங்கள் குரல் இனிமையாக வேண்டுமா? இதை சாப்பிடுங்கள்!
வெண்பூசணியில் இவ்ளோ நன்மைகளா?
ஒரே ஒரு  மிளகு போதும் இந்த குளிர்காலத்தை கடந்துவிடலாம்!
தயிரில் இத்தனை இத்தனை நன்மைகளா?
சூப்பர் டேஸ்டியாக சுண்டல் தயாரிக்க ருசிகர டிப்ஸ்!