வெள்ளிக்கிழமை 18 ஜனவரி 2019

இன்றைய மருத்துவ சிந்தனை: வசம்பு

Published: 21st August 2018 03:25 PM

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலி,வயிற்றுப் போக்கு குணமாக வசம்பை விளக்குத் தீயில் சுட்டு, தாய்ப்பாலில் 3 முறை உரைத்து தொப்புளைச் சுற்றி தடவலாம் அல்லது வசம்பைச் சுட்டு கரியாக்கி 100 மி.கி. அளவு, 1 பாலாடை அளவு தாய்ப்பாலில் கலக்கி உள்ளுக்குள் கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு குணமாகும்.

குழந்தைகளுக்கு உண்டாகும் நாக்கு தடுமாற்றம், வாயில் நீரொழுகல் நீங்க வசம்பை விளக்குத் தீயில் சுட்டு அவற்றை தாய்ப்பாலில் 3 முறை உரைத்து குழந்தைகளின் நாக்கில் தடவி வந்தால் நாக்குத் தடுமாற்றம் (திக்குவாய்), வாயில் நீரொழுகல் ஆகியன தீரும்.

சிறுநீரகம் சார்ந்த பிரச்சனைக்கு தீர்வு வசம்பு, புதினா இலை, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம் இவ்வைந்தையும்  தேவையான அளவு எடுத்து கஷாயம் செய்து அதனுடன்  பனங்கற்கண்டு சேர்த்து குடித்துவந்தால் சிறுநீரகக் கோளாறுகள்  அனைத்தும் நீங்கும்.

வயிற்று உப்புசம் உடனே நீங்க வசம்பு சிறிதளவு எடுத்து அதனுடன் இரண்டு வெற்றிலை சேர்த்து மென்று தின்று உடனே இரண்டு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால் வயிறு உப்புசம் குணமாகும்.

கடுமையான வாந்தி உடனே நிற்க வசம்புத்தூளை எலுமிச்சைச் சாறில் கலந்து குடித்து வந்தால் கடுமையான  வாந்தி உடனே நிற்கும்.

சீரற்ற மாதவிலக்கு சீராக வசம்புத்தூள் (சிறிதளவு) அதனுடன் ஒரு செவ்வாழை பழத்தை சேர்த்து சாப்பிட்டுவந்தால் ஒழுங்கற்ற மாதவிடாய்க் கோளாறுகள் ஒழுங்குபடும்.

ஞாபக சக்தி அதிகரிக்க வசம்புடன் வல்லாரை இலையை வைத்து அரைத்து தேனில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஞாபகசக்தி அதிகமாகும்.

KOVAI HERBAL CARE VEGETABLES CLINIC
 

கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

Cell  :  96557 58609 / Covaibala15@gmail.com

More from the section

ஒரே ஒரு  மிளகு போதும் இந்த குளிர்காலத்தை கடந்துவிடலாம்!
தயிரில் இத்தனை இத்தனை நன்மைகளா?
சூப்பர் டேஸ்டியாக சுண்டல் தயாரிக்க ருசிகர டிப்ஸ்!
உங்கள் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் சிறுதானியங்கள்!
உடல் இளைத்துக் காணப்படுபவர்கள் தேற இதை முயற்சித்துப் பாருங்கள்!