24 பிப்ரவரி 2019

விஷப் பூச்சிகள் கடித்தால் இந்தக் கீரை மருந்தாகும்!

Published: 06th September 2018 01:03 PM

கரிசலாங்கண்ணிக் கீரையில் சிறிது பால் விட்டு அரைத்து தலையில் தேய்த்து குளித்து வர தலைமுடி உதிர்வது நிற்கும். முடி கறுத்து வளரும். 

இதன் இலைகளை மென்று பல் துலக்கினால் ஈறுவீக்கம், பல்வலி, பல் தேய்வு முதலிய குறைகள் நீங்கும். பற்கள் உறுதியாகும். பற்களில் உள்ள மஞ்சள் நிறம் நாளடைவில் மாறும்.

கரிசலாங்கண்ணிக் கீரைச் சாறுடன் சிறிது தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் சளித்தொல்லை நீங்கும். உடலில் பெருகும் வேண்டாத பித்த நீரை வெளியேற்ற உதவும்.

விஷப்பூச்சிகள் கடித்த இடத்தில் கரிசலாங்கண்ணிக் கீரையை அரைத்து தடவினால் விஷம் இறங்கும்.

கரிசாலை, கையாந்தகரை, பொற்றிலைப்பாவை, பிருங்கராஜ் போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.
- சு.பொன்மணி ஸ்ரீராமன்

Tags : greens karisalanganni keerai கீரை கரிசலாங்கண்ணிக் கீரை

More from the section

உங்கள் குரல் இனிமையாக வேண்டுமா? இதை சாப்பிடுங்கள்!
வெண்பூசணியில் இவ்ளோ நன்மைகளா?
ஒரே ஒரு  மிளகு போதும் இந்த குளிர்காலத்தை கடந்துவிடலாம்!
தயிரில் இத்தனை இத்தனை நன்மைகளா?
சூப்பர் டேஸ்டியாக சுண்டல் தயாரிக்க ருசிகர டிப்ஸ்!