புதன்கிழமை 17 ஜூலை 2019

நீர்ச் சுருக்கு, நீர்க்கடுப்பு, உடல் உஷ்ண வியாதிகள் மற்றும் மூட்டு வீக்கத்தை போக்கும் ஆரோக்கியத் துவையல்!

By கோவை பாலா| Published: 13th June 2019 10:51 AM

முள்ளங்கித்  துவையல்

தேவையான பொருட்கள்

முள்ளங்கி - கால் கிலோ
புளி - 25 கிராம்
மிளகு - 10 கிராம்
உளுந்தம் பருப்பு - 10 கிராம்
உப்பு, பெருங்காயம், எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை : முதலில் முள்ளங்கியை சுத்தம் செய்து சிறிதாக அரிந்து நீராவியில் வேக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பெருங்காயம் , மிளகு , உளுந்தம்பருப்பு  ஆகியவற்றை போட்டு சிறிது எண்ணெய் சேர்த்து  லேசாக  வதக்கிக் கொள்ளவும். வேக வைத்த முள்ளங்கியுடன் புளி மற்றும் வதக்கி வைத்துள்ளவற்றை சேர்த்து ஒன்றாக அரைத்து பின்னர் சிறிது எண்ணெய் சேர்த்து தாளித்து கொள்ளவும். முள்ளங்கி துவையல் தயார்.

பயன்கள் : இந்த துவையலை நீர்கடுப்பு, நீர்ச் சுருக்கு இருக்கும் பொழுது உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால்  பிரச்னை தீரும். உடல் சூட்டினால் உண்டாகும் வியாதிகளை குணப்படுத்தும் ஆற்றல் உண்டு. மூட்டு வீக்கம் உள்ளவர்கள் தினமும் உணவில் இந்தத் துவையலை அதிகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வீக்கம் மறையும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com
 

Tags : thuvaiyal side dish முள்ளங்கி துவையல் உடல் சூடு

More from the section

உடல் எடைக் குறைக்க அற்புதமான ஆரோக்கிய பச்சடி
உங்கள் உடலை அழகாக்க உதவும் ஆரோக்கியத் துவையல்
உங்கள் எலும்புக்கு வலுசேர்க்கும் அற்புத உணவு
நரம்புத் தளர்ச்சி, கை  கால் நடுக்கம் மற்றும் உடல் பலவீன குறைபாட்டை சீராக்கும் தேநீர்
உங்கள் ஆரோக்கியத்துக்குத் தேவையான சத்துக்களின் பட்டியல் இதோ!