புதன்கிழமை 17 ஜூலை 2019

ஞாபக சக்தி திறனை அதிகரிக்க உதவும் அற்புத ஆற்றல் மிக்க ஜூஸ்

By கோவை பாலா| Published: 19th June 2019 10:59 AM

வல்லாரைக் கீரை ஜூஸ்

தேவையான பொருட்கள்

வல்லாரைக் கீரை - 50 கிராம்
ரோஜா இதழ்கள் - ஒரு கைப்பிடி
அமுக்கரா பொடி - கால் தேக்கரண்டி
ஏலக்காய்த் தூள் - கால் தேக்கரண்டி
தண்ணீர் - தேவையான அளவு
தேன் - தேவையான அளவு

செய்முறை : வல்லாரைக் கீரையை நன்றாக கழுவி மிக்ஸியில் போட்டு அதனுடன் மற்ற பொருட்களையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து வடிகட்டி தேவையான அளவு தேன் சேர்த்து  பருகவும்.

பயன்கள் : இந்த ஜூஸை குடித்து வந்தால் உடலில் உண்டாகும் கொழுப்பு கட்டிகளை கரைக்கும். சிந்தனை, அறிவுத் திறன் மற்றும் ஞாபக சக்தி மேலோங்கும். ரத்த அழுத்தத்தை சமன்படுத்தும், நல்ல சுறுப்பை உண்டாகும் ஆற்றல் மிக்க அற்புதமான ஜூஸ்.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

Tags : keerai juice vallarai வல்லாரை கீரை வல்லாரை ஜூஸ்

More from the section

உடல் எடைக் குறைக்க அற்புதமான ஆரோக்கிய பச்சடி
உங்கள் உடலை அழகாக்க உதவும் ஆரோக்கியத் துவையல்
உங்கள் எலும்புக்கு வலுசேர்க்கும் அற்புத உணவு
நரம்புத் தளர்ச்சி, கை  கால் நடுக்கம் மற்றும் உடல் பலவீன குறைபாட்டை சீராக்கும் தேநீர்
உங்கள் ஆரோக்கியத்துக்குத் தேவையான சத்துக்களின் பட்டியல் இதோ!