21 ஏப்ரல் 2019

நாவூறும் சுவையில் ஒரு தர்பூசணி அல்வா!

Published: 06th March 2019 04:03 PM

 

தேவையானவை:


தர்பூசணிப் பழம்(சிறியது) - 1
வெல்லம் - அரை கிலோ
தேங்காய்ப்பால் - அரை டம்ளர்
நெய் - 50 கிராம், முந்திரி - 10
ஏலக்காய்த் தூள் - சிறிய அளவு


செய்முறை:

தர்ப்பூசணியில் சிவப்புச் சதைப் பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு, விதைகளை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கி, மிக்ஸியிலிட்டு கூழாக அரைத்து எடுக்கவும்.

வெல்லத்தைப் பொடித்து போதிய அளவு தண்ணீரில் இட்டு கரைத்து வடிகட்டவும்.

வாணலியை அடுப்பில் வைத்து, வெல்லக் கரைசலை விட்டு பாகு காய்ச்சவும்.

பாதிபதம் வந்ததும், தர்ப்பூசணிக் கூழ், தேங்காய்ப்பால் சேர்த்து வேக விடவும்.

இடையிடையே நெய் ஊற்றி, நன்கு கிளறி கொடுக்கவும்.

கலவை நன்கு வெந்து வாணலியில் ஒட்டாது சுருண்டு அல்வா பதம் வந்ததும், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரிபருப்பு சேர்த்து இறக்கவும்.

நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி பரவலாக வைக்கவும், ஆறியதும் விரும்பும் அளவில் துண்டுகள் போடவும்.

தர்ப்பூசணி அல்வா தயார். சுவையும், சத்தும் மிக்கது.

Tags : water melon melon halwa அல்வா தர்பூசணி

More from the section

கருப்பைக் கோளாறுகள் மற்றும் வெள்ளைப்படுதல் குறைபாட்டை சீர்செய்யும் பழச்சாறு 
உங்கள் சருமம் பளிச்சென்று இருக்க வேண்டுமா?
கோடை காலத்தில் உடல் சூடு தணிய இதைச் சாப்பிடலாம்!
உடல் பருமன், தொண்டை அழற்சியை குணப்படுத்தும் அற்புத ஜூஸ்
வாய்ப்புண் மற்றும் வாய் துர்நாற்றத்தை குணப்படுத்தும் ஆரோக்கிய ஜூஸ்