புதன்கிழமை 16 ஜனவரி 2019

கர்ப்பிணிகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய பழம் இதுதான்!

Published: 03rd August 2018 04:11 PM

கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரமே சாப்பிட வேண்டும்.  இதனால் ரத்தத்தில்  உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.

வயிற்றில் குழந்தை வளர, வளர, அதிகமாக சாப்பிட முடியாது.  சீக்கிரம் பசியும் எடுக்காது. அதனால் சாப்பிடாமல் இருக்காமல், ஜூஸ், முளை கட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.

பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப் பெற சின்ன சின்ன உடற்பயிற்சிகள் செய்வது நல்லது.

கர்ப்பிணிகள் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியை வாழைப்பழம் தருகிறது. உடல்  சூடு  மட்டுமல்ல உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப் பழம் நீக்குகிறது.  இதனால் தாய்லாந்தில்  கர்ப்பிணி பெண்களின் தினசரி உணவில்  வாழைப்பழ ரெசிபிகள் விதவிதமாக இருக்குமாம். மேலும், வாழைப் பழத்தில் இருக்கும் பொட்டாசியம் சத்து குழந்தைகளின் மூளைத் திறனைத் தூண்டுகிறது.

கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். 

பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு  சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டி விடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கும் இதுதான் காரணம். எனவே, பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்துதான் அதற்கான பெல்ட்டை அணியலாம்.

Tags : pregnant pregnancy கர்ப்பிணிகள் குழந்தை வாழைப்பழம்

More from the section

கர்ப்பிணிப் பெண்களின் முதுகு வலியை குணப்படுத்த இதோ எளிய வழி!
மார்பக புற்றுநோய் வராமலிருக்க பெண்கள் தாய்ப்பால் புகட்டுவது அவசியம்: அரசு மருத்துவமனை முதல்வர் பேச்சு
சிசேரியன் பயத்தால் அதிகரிக்கிறதா வீட்டுப் பிரசவங்கள்?
அதென்ன 'திவாஸ்?’ தெரிந்து கொள்வோம்!
கர்ப்பகால நீரிழிவுக்கான உணவுமுறைகள்!