24 பிப்ரவரி 2019

திட்டமிட்டபடி இன்று ரயில்வே தேர்வு

DIN | Published: 17th August 2018 02:52 AM


ரயில்வே ஆள்தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தேர்வுகள் திட்டமிட்டபடி வெள்ளிக்கிழமை (ஆக.17) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவைத் தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகளால் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில்வே ஆள்தேர்வு வாரியத்தால் டெக்னிஷியன்ஸ், லோகோ பைலட் இடங்களுக்கு அறிவிக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறுமா? என கேள்வியெழுந்தது.
இந்நிலையில், அந்தத் தேர்வுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று இந்திய ரயில்வே தகவல் தொடர்பு துறை இயக்குநர் ராஜேஷ் வாஜ்பாய் தெரிவித்துள்ளார்.
எனினும், கேரள மாநிலம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதால், அந்த மாநிலத்தில் மட்டும் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கேரளத்தில் இந்தத் தேர்வுகளை 27 ஆயிரம் பேர் எழுத இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More from the section

"பயங்கரவாதிகளுடன்தான் போர் காஷ்மீரிகளுடன் அல்ல': பிரதமர் நரேந்திர மோடி
தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து: மார்ச் 1 முதல் கேஜரிவால் உண்ணாவிரதம்
தேவைக்கேற்பவே போர் விமானங்களின் எண்ணிக்கை
தில்லி புறநகரில் ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல்: மூவர் கைது
மனோகர் பாரிக்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி