24 மார்ச் 2019

ஹனுமன் தலித் என்று கூறிய விவகாரம்:  வழக்கை எதிர்நோக்கும் யோகி ஆதித்யநாத்

IANS | Published: 04th December 2018 03:13 PM

 

ஜெய்பூர்: ஹனுமன் தலித் என்று கூறிய விவகாரத்தில்  உத்தரப்பிரதேச முதல்வர் யோகி மீது வழக்குத் தொடர அனுமதி கேட்டு,ஜெய்பூர் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த மாத இறுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அல்வர் என்னும் இடத்தில பேசும்போது, 'ஹனுமன் வனவாசி என்றும், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்' என்று கூறியிருந்தார். அவரது பேச்சுக்கு அப்போதே பலத்த கண்டணங்கள்  எழுந்தன 

இந்நிலையில் ஹனுமன் தலித் என்று கூறிய விவகாரத்தில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி மீது வழக்குத் தொடர அனுமதி கேட்டு, ஜெய்பூர் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக ஜெய்பூரைச் சேர்ந்த சர்வ பிராமின் மகாசபா  என்னும் அமைப்பின் தலைவர் சுரேஷ் மிஸ்ரா. ஜெய்பூர் கீழமை நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, அதில் பங்கேற்ற உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், அல்வார் என்னும் இடத்தில் பேசும்போது, 'ஹனுமன் வனவாசி என்றும், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்' என்றும் கூறியிருந்தார் இதன்மூலம் அவர் ஹிந்துக்களின் மனதினை புண்படுத்தியிருக்கிறார். 

எனவே அவர் மீது இ.பி.கோ 295, 295 (அ) & 2998 ஆகிய பிரிவுகளின் வழக்குத் தொடர அனுமதிக்க வேண்டும், 

இவ்வாறு அவரது மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த மனு மீது டிசம்பர் 11-ஆம் தேதி விசாரணை நடைபெற உள்ளது.     

ஏற்கனவே யோகியின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர் மூன்று நாட்களில் மன்னிப்பு கேட்கா விட்டால், அவரை மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சர்வ பிராமின் மகாசபா எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

Tags : rajasthan asembly election UP CM yogi speech hanuman dalit tribal controversy case permission pettion sunil mishra

More from the section

மோடிக்கும், மம்தாவுக்கும் வேறுபாடில்லை: ராகுல் தாக்கு
கடற்படை தளபதியாக கரம்வீர் சிங் நியமனம்
லோக்பால் தலைவராக பினாகி சந்திரகோஷ் பதவியேற்பு
தனிக்காட்டு ராஜாங்கம் நீடிக்குமா?
2004-2014 காலகட்டத்தில் ராகுலின் வருமானம் அதிகரித்தது எப்படி?