திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

விஜய் திவஸ் தினம்: தில்லியில் அமர்ஜவான் ஜோதியில் மரியாதை செலுத்திய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 

DIN | Published: 16th December 2018 01:52 PM

 

புது தில்லி: பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த போரில் இந்தியா பெற்ற வெற்றியை நினைவு கூறும் விஜய் திவஸ் தினத்தை முன்னிட்டு, உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு  மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமர் ஜவான் ஜோதியில் மரியாதை செலுத்தினார்.

பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த 1971–ம் ஆண்டு நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16–ந்தேதி நாடு முழுவதும் ‘விஜய் திவஸ்’ என்ற பெயரில் வெற்றியை நினைவு கூறும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது

இந்த போரில் தங்கள் இன்னுயிரை இழந்த ராணுவ வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள அமர் ஜவான் ஜோதியில், ஞாயிறன்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 

அதேசமயம், 'வீரர்களின் அசாத்திய துணிச்சலும் தேசபக்தியும் பாகிஸ்தான் போரில் இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்தது. வீரர்களின் சேவை எப்போதும் ஒவ்வொரு இந்தியராலும் போற்றப்படும்' என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  

Tags : India pakistan victory nirmala seetharaman Tribute 1971 war vijay diwas amar javan jothi

More from the section

கர்நாடகாவில் படகு கவிழ்ந்து விபத்து: 16 பேர் பரிதாப பலி  
மத்திய நிதியமைச்சர் இல்லாமல் நடந்த பட்ஜெட் தயாரிப்புக்கான அல்வா பூஜை
'நடமாடும் கடவுள்' சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமி 111வது வயதில் காலமானார்
இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக முன்பாகவே இந்தியா திரும்பிவிடுவார் அருண்ஜேட்லி
ஜம்மு-காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை