திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

கர்நாடகாவில் சர்க்கரை ஆலை பாய்லர் வெடித்து 6 பேர் பலி: 5 பேர் காயம்

DIN | Published: 16th December 2018 03:58 PM

பெங்களூரு: கர்நாடக மாநிலம், பகல்கோட் மாவட்டம், முதோல் என்ற இடத்தில் உள்ள சர்க்கரை ஆலையில் பாய்லர் வெடித்ததில் ஆலையில் பணியில் இருந்த 6 பேர் உயிரிழந்தனர், 5 பேர் காயமடைந்துள்ளனர். 

கர்நாடக மாநிலம், பகல்கோட் மாவட்டம், முதோல் என்ற இடத்தில் உள்ள நிரானி என்ற சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில், இன்று காலை திடீரென கொதிகலன் வெடித்து விபத்திற்குள்ளானது. இதில், பணியில் ஈடுபட்டிருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் பலத்த காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த சர்க்கரை ஆலை முன்னாள் அமைச்சர் முர்கேஷ் நிரானிக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags : karnataka 5 critically injured Nirani sugars Bagalkot district 6 people died boiler blast Mudhol

More from the section

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் நீர் பங்கீடு பிரச்னைகளுக்கு இந்த திட்டம் தீர்வு காணும்: நிதின் கட்கரி
மேக்கேதாட்டு அணை: விரிவான திட்ட அறிக்கையை சமர்பித்தது கர்நாடக அரசு
60 வயதைத் தாண்டும் இந்து மடாதிபதிகளுக்கு ஓய்வூதியம்: உ.பியில் யோகியின் அதிரடி பிளான் 
கர்நாடகாவில் படகு கவிழ்ந்து விபத்து: 16 பேர் பரிதாப பலி  
மத்திய நிதியமைச்சர் இல்லாமல் நடந்த பட்ஜெட் தயாரிப்புக்கான அல்வா பூஜை