வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

ராம்நாத் கோவிந்த் நாளை வியத்நாம் பயணம்

DIN | Published: 17th November 2018 02:54 AM


குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வியத்நாமுக்கு ஞாயிற்றுக்கிழமை செல்கிறார். பின்னர், அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
18-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை இந்தச் சுற்றுப்பயணத்தை அவர் மேற்கொள்ளவுள்ளார்.
இதுதொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செயலர் விஜய் தாக்குர் சிங், தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: முதல்கட்டமாக ராம்நாத் கோவிந்த் வியத்நாமின் டா நாங் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை செல்கிறார். அவர் ஆசியான் நாட்டுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும். உலக பாரிம்பரிய சின்னம் இருக்கும் மி சன் பகுதிக்கும் அவர் செல்கிறார். வியத்நாம் தலைநகர் ஹனோய்க்கு செல்லும் ராம்நாத், ராணுவ வீரர்களின் நினைவிடத்துக்கும், வியத்நாம் முன்னாள் அதிபர் ஹோ சி மின்னின் கல்லறைக்கும் சென்று மரியாதை செலுத்தவுள்ளார்.
வியத்நாம் அதிபர் நிகுயென் பு டிராங், பிரதமர் நிகுயென் ஸுவான் புக் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். வியத்நாம் நாடாளுமன்றத்தில் அவர் உரை நிகழ்த்துகிறார். சீன அதிபர் ஷி ஜின்பிங்குக்கு பிறகு, அந்த அவையில் உரை நிகழ்த்தும் வெளிநாட்டு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆவார்.
அந்நாட்டிலிருந்து அவர் 21-ஆம் தேதி ஆஸ்திரேலியா செல்கிறார். அங்கு 24-ஆம் தேதி வரை அவர் இருப்பார். ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் முதல் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் என்பது குறிப்பிடத்தக்கது. மெல்போர்ன், சிட்னி ஆகிய நகரங்களுக்கு சுற்றுப் பயணம் செல்கிறார். அந்நாட்டுப் பிரதமர் உள்ளிட்ட தலைவர்களையும் அவர் சந்தித்து பேசுகிறார் என்று விஜய் தாக்குர் சிங் கூறினார்.
 

More from the section

காஷ்மீரில் இருவேறு இடங்களில் என்கவுண்டர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
யார் பின்னால் ஒளிந்து கொள்கிறீர்களோ அவர்களைப் பற்றியாவது சிந்தியுங்கள்: மோடிக்கு ராகுல் அறிவுரை
புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெயஷ் இ-முகமது அமைப்பு பயங்கரவாதி தில்லியில் கைது
பாஜகவில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர்!
கர்நாடகாவில் 5 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் பலியானோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு