செவ்வாய்க்கிழமை 22 ஜனவரி 2019

அகஸ்டா வெஸ்ட்லாண்ட் வழக்கு: விமானப்படை முன்னாள் தளபதிக்கு ஜாமீன்

DIN | Published: 12th September 2018 08:21 PM

 

அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்துடன் தொடா்புடைய நிதி முறைகேட்டு வழக்கில் விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகி உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்கி தில்லி சிறறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

முன்னதாக, தியாகி, அவரது மைத்துனா்கள், இத்தாலியைச் சோ்ந்த இடைத்தரகா்கள் உள்ளிட்டோா், சிறப்பு நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமாா் முன்னிலையில் ஆஜராகினா். அவா்கள் அனைவரும் ரூ.1 லட்சம் மதிப்பிலான ஜாமீன் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.

இத்தாலியைச் சோ்ந்த பின்மெக்கானிக்கா நிறுவனத்தின் மற்றொரு அங்கமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் பிரிட்டனில் உள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து இந்திய விமானப்படைக்கு, முக்கியஸ்தா்கள் பயணிப்பதற்கான 12 விவிஐபி ஹெலிகாப்டா்களை வாங்குவதற்கு பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

அப்போது, ஒப்பந்தத்தை உறுதி செய்வதற்காக அந்நிறுவனம் விதிகளை மீறி செயல்பட்டதாகவும், ரூ.423 கோடி அளவுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் புகாா் எழுந்தது. இதனால், அந்த ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்தது.

இந்த முறைகேடு தொடா்பாக இந்திய விமானப்படையின் அப்போதைய தளபதி எஸ்.பி.தியாகி, அவரது மைத்துனா்களான ஹைதான் - ரீது தம்பதியா், ராஜீவ் சக்சேனா - ஷிவானி தம்பதியா் ஆகியோா் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இத்தாலியைச் சோ்ந்த இடைத்தரகா்கள் கா்லோ கெரோசா, குய்டோ ஹாஸ்கே மற்றும் பின்மெக்கானிக்கா நிறுவனத்தின் இயக்குநா்கள் குஸுபே ஓா்ஸி, புருனோ பாக்னோலினி ஆகியோா் மீதும் குற்றம்சாட்டப்பட்டது. 

இந்த இடைத்தரகா்கள், இயக்குநா்கள், சக்சேனா மற்றும் தியாகி உள்ளிட்டோா் நீதிமன்றறத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என கடந்த ஜூலை 24-ஆம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது.

இதேபோல், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த 28 தனிநபா்களும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த 28 பேரும் புதன்கிழமை நீதிமன்றத்துக்கு வரவில்லை. அதே சமயம், எஸ்.பி.தியாகி உள்ளிட்டோா் நீதிமன்றத்தில் ஆஜராகினா். அவா்கள் அனைவருக்கும் நீதிபதி ஜாமீன் வழங்கினாா்.

More from the section

பிரதமர் மோடி எப்போதும் டீ விற்றதே கிடையாது: பற்ற வைத்த பிரவீன் தொகாடியா 
தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த கால அவகாசம் உள்ளது: தேர்தல் ஆணையம்
இந்தியாவின் திறமையை வெளிநாடுகளில் பரப்பும் தூதுவர்கள்: யாரைச் சொல்கிறார் மோடி? 
2014-ஆம் ஆண்டு தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி: தொழில்நுட்ப நிபுணர் மீது போலீசில் புகார்  
என்னாது.. மீண்டும் அவரைக் காணவில்லையா?? அதிருப்தியில் கட்சியினர்!