வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மம்தா முடிவு

DIN | Published: 12th September 2018 01:21 AM


மேற்கு வங்கத்தில் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு தலா ரூ.1 குறைக்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
பெட்ரோல், டீசல் மீதான செஸ்' வரியை குறைக்குமாறு மத்திய அரசையும் அவர் வலியுறுத்தினார்.
கொல்கத்தாவில் அவர் இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை மேலும் கூறியதாவது:
பெட்ரோல், டீசல் லிட்டருக்கு தலா ரூ.1 குறைக்க முடிவு செய்துள்ளோம். மத்திய அரசும் எரிபொருள்கள் மீது விதிக்கப்படும் செஸ்' வரியைக் குறைக்க வேண்டும். சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை சரிவடைந்தபோதிலும் 9 முறை கலால் வரியை மத்தியில் ஆளும் பாஜக அரசு உயர்த்தியது. மேற்கு வங்கத்தில் எங்களது ஆட்சிக் காலத்தில் விற்பனை வரி, செஸ் வரி என எந்த வரியையும் உயர்த்தவில்லை.
பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
மேற்கு வங்க அரசு ஆண்டுதோறும் ரூ.48,000 கோடி கடனை மத்திய அரசுக்கு திருப்பிச் செலுத்தி வருகிறது. வேறு எந்த மாநிலமும் இதுபோன்று செய்வதில்லை என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
இதுகுறித்து அந்த மாநில அதிகாரி ஒருவர் கூறுகையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் முதல்வரின் அறிவிப்பு நடைமுறைக்கு வரும்' என்றார்.
ராஜஸ்தானில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியில் 4 சதவீதத்தை அந்த மாநில முதல்வர் வசுந்தரா ராஜே அண்மையில் குறைத்தார். இதேபோல், பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் கூடுதல் வரியில் 2 ரூபாயை குறைப்பதாக ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு திங்கள்கிழமை அறிவித்தார்.
 

More from the section

புல்வாமா தாக்குதல்: விசாரணை என்ஐஏ-வுக்கு மாற்றம்
காலிந்தி விரைவு ரயிலில் சக்தி குறைந்த குண்டு வெடிப்பு
மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதை எதிர்க்கவில்லை: சவூதி அரேபியா அறிவிப்பு
உலகக் கோப்பை: இந்திய-பாக். ஆட்ட டிக்கெட்டுகளை வாங்க 4 லட்சம் பேர் விண்ணப்பம்
திருப்பதி விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கம்: குடியரசு துணைத் தலைவர் அடிக்கல்