புதன்கிழமை 23 ஜனவரி 2019

விதிமீறி கட்சிக்கு நன்கொடை பெற்ற விவகாரம்: ஆம் ஆத்மிக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

DIN | Published: 12th September 2018 01:25 AM


விதிகளை மீறி கட்சிக்கு நன்கொடை பெற்ற விவகாரத்தில் 20 நாளில் பதிலளிக்கவில்லை வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த நோட்டீஸுக்கு பதிலளிக்கவில்லை என்றால் தற்போது உள்ள தகவல்களின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாவது:
2014-2015ஆம் ஆண்டு கட்சிக்கு அளிக்கப்பட்ட நன்கொடை நிதி குறித்த அறிக்கையை 2015, செப்டம்பர் 30ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2,696 பேர் ரூ. 37,45,44,618 நன்கொடை அளித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 2017, மார்ச் 20ஆமே தேதி தாக்கல் செய்யப்பட்ட திருத்தப்பட்ட அறிக்கையில், 8,264 பேர் ரூ. 37,60,62,631 நன்கொடை அளித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், 2014-15 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சிக்கு வழங்கப்பட்ட நன்கொடை குறித்து மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளித்துள்ளது. அதில், ஆம் ஆத்மி கட்சியின் வங்கி கணக்கில் குறிப்பிட்ட ஆண்டில் ரூ. 67.67 கோடி வர பெற்றுள்ளது என்றும் இதில் ரூ. 20,001-க்கு அதிமாக பெற்ற நன்கொடையின் தொகை ரூ. 64.44 கோடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஆனால், நன்கொடையின் மூலம் ரூ. 55.15 கோடி மட்டுமே பெற்றதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவிக்கிறது. ஆகையால், பெயர் தெரியாத நபர்களிடம் இருந்து கட்சிக்கு ரூ. 13.16 கோடி கணக்கில் வராத பணம் பெறப்பட்டுள்ளது. 
இதில், சுமார் ரூ. 2 கோடி அளவிலான பணப் பரிவர்த்தனை ஹவாலா மூலம் நடைபெற்றுள்ளது. இந்தத் தொகை தாமாக முன்வந்து சிலர் அளித்ததாக ஆம் ஆத்மி கட்சி தவறாக குறிப்பிட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் இணையதளத்தில், நன்கொடை அளித்தவர்களின் விவரங்கள் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்திடமும் தவறான தகவல்களை ஆம் ஆத்மி கட்சி அளித்துள்ளது. நன்கொடை விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் கேள்வி எழுப்பியதால் மத்திய நேரடி வரி விதிப்பு வாரியத்தில் ஆம் ஆத்மி கட்சி திருத்திய அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. 
இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி 20 நாளில் பதிலளிக்க வேண்டும். இல்லையென்றால், தேர்தல் ஆணையம், மத்திய நேரடி வரி விதிப்பு வாரியத்திடம் உள்ள தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

More from the section

நலிவுற்ற யானைகளின் புகலிடமாகத் திகழும் பராமரிப்பு மையம்!
பயங்கரவாதிகளைக் கண்டறிய ராஜபாதையில் நவீனரக கேமராக்கள்!
பாஜகவின் ஊழல் இல்லாத ஆட்சி: பிரதமர் மோடி பெருமிதம்
இந்திய மாலுமிகளுடன் சென்ற இரு கப்பல்களில் தீ: 14 பேர் பலி: ரஷிய கடல் பகுதியில் விபத்து
மேக்கேதாட்டு: தமிழக அரசு பதில் மனு தாக்கல்