வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

விலையை கட்டுப்படுத்துவதில் காங்கிரஸை போல பாஜகவும் தோல்வி: மாயாவதி குற்றச்சாட்டு

DIN | Published: 12th September 2018 01:20 AM


பெட்ரோலியப் பொருள்களின் விலையை கட்டுப்படுத்துவதில் காங்கிரஸை போல பாஜகவும் தோல்வியடைந்து விட்டதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து மாயாவதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
மத்தியில் முன்பு ஆட்சியிலிருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 2ஆவது அரசு ஆட்சிக்காலத்திலும் மக்கள் விரோத கொள்கைகள் செயல்படுத்தப்பட்டன. அதேபோல், தற்போது ஆட்சியிலிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசும், மக்கள் விரோத கொள்கைகளை செயல்படுத்துகிறது.
விலைவாசி உயர்வால் நாட்டு மக்கள் துன்பப்படும் நிலையில், பொருளாதாரம் தொடர்பான கேள்விகளுக்கு பாஜக தலைவர்கள் பதிலளிப்பதை தவிர்க்கின்றனர். பெட்ரோலியப் பொருள்கள் தொடர்பாக நடைமுறைக்கு ஒவ்வாத, நியாயமில்லாத கொள்கையை மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது.
பெட்ரோலியப் பொருள்களின் விலை கட்டுப்பாட்டை மீறி சென்று விட்டது. மத்தியில் இருக்கும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, இந்த விவகாரத்தில் தனது தொழிலதிபர்கள் நண்பர்களை பகைத்து கொள்ள விரும்பவில்லை.
பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவதில், மத்தியில் ஆளும் மோடி அரசு எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. பெட்ரோலியப் பொருள்களின் விலையை கட்டுப்படுத்துவதில் காங்கிரஸும், பாஜகவும் தோல்வியடைந்து விட்டன. இதனால் பாதிக்கப்படும் நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள் மீது மோடி அரசு இரக்கம் காட்டவில்லை. மத்திய அரசு விரும்பினால், பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும் என்று அந்த அறிக்கையில் மாயாவதி குறிப்பிட்டுள்ளார்.
 

More from the section

முத்திரைத்தாள் சட்டத் திருத்தம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்
மகாராஷ்டிர அரசுப் பேருந்தில் வெடிபொருள்கள்: ஓட்டுநர், நடத்துநரிடம் விசாரணை
சர்வதேச நீதிமன்றத்தில் குல்பூஷண் ஜாதவ் வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு: இந்தியாவின் கோரிக்கையை நிராகரிக்க பாகிஸ்தான் வலியுறுத்தல்
நெல்லூர்-சென்னை இடையே புதிய பயணிகள் ரயில்
மேக்கேதாட்டு விவகாரம்: ஆதரவு திரட்டும் கர்நாடகம்; மெத்தனத்தில் தமிழகம்!