திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

இடதுசாரி ஆர்வலர் ஐவருக்கு செப்.17 வரை வீட்டுக்காவல் நீட்டிப்பு

DIN | Published: 12th September 2018 01:10 PM

 

மகாராஷ்டிர மாநிலம், பீமா - கோரேகானில் நடந்த வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இடதுசாரி ஆர்வலர்கள் 5 பேரின் வீட்டுக்காவலை, வரும் 17-ஆம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், பீமா-கோரேகான் பகுதியில் நிகழ்ந்த வன்முறையில் தொடர்பு இருப்பதாகக் கூறி, இடதுசாரி ஆர்வலரும், எழுத்தாளருமான வரவர ராவ் உள்பட 5 பேரை மகாராஷ்டிர காவல்துறையினர் அண்மையில் கைது செய்தனர். 

இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து 5 பேரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக சிறையில் அடைக்காமல், காவல்துறையினரின் பாதுகாப்பில் செப்டம்பர் 6-ஆம் தேதி வரை வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிட்டனர். இதையடுத்து, 6-ஆம் தேதி நடைபெற்ற வழக்கின் அடுத்தகட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட 5 பேரின் வீட்டுக்காவலை 12-ஆம் தேதி வரை நீட்டித்து ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அவர்களது வீட்டுக்காவலை மேலும் 17-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டனர். மேலும், வழக்கின் மீதான அடுத்தகட்ட விசாரணை 17-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

More from the section

கர்நாடகாவில் சொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடையே கைகலப்பு?
பொறியியல் பட்டதாரிகளுக்கு ரூ.1,80,000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? அழைக்கிறது பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம்..! 
மண்டல பூஜை  நிறைவு: சாத்தப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 
பிளஸ் டூ முடித்தவர்களுக்கு வேலை வேண்டுமா..? அழைக்கிறது ஏர் இந்தியா...!
அதிகாரத்துக்காக சுயமரியாதையை விற்கத் துணிந்தவர்: மாயாவதியைவிமர்சித்த பாஜக பெண் எம்.எல்.ஏ