புதன்கிழமை 23 ஜனவரி 2019

கேரள மறுகட்டமைப்புக்கு கோயில்களில் இருக்கும் தங்கத்தை பயன்படுத்தலாம்: பாஜக எம்.பி.

DIN | Published: 13th September 2018 12:44 AM

 

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளத்தில் மறுகட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு, அந்த மாநிலத்திலுள்ள முக்கிய கோயில்களில் இருக்கும் தங்க நகைகள், சொத்துகளை பயன்படுத்தலாம் என்று பாஜக எம்.பி. உதித் ராஜ் தெரிவித்தார்.
இதுதொடர்பாக சுட்டுரையில் அவர் வெளியிட்டுள்ள பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற பத்மநாபபுரம் கோயில், சபரிமலை அய்யப்பன் கோயில், குருவாயூர் கிருஷ்ணர் கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் இருக்கும் தங்கமும், பிற சொத்தும் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிக மதிப்புடையவை.
கேரளத்துக்கு ஏற்பட்டுள்ள ரூ.21 ஆயிரம் கோடி இழப்புக்கு இதிலிருந்து இழப்பீடு வழங்கலாம். கோயில்களின் சொத்துகளுடன் ஒப்பிடுகையில், இது குறைவுதான்.
மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கையிலும், துன்பத்தில் இருக்கையிலும் இதுபோல் மிகப்பெரிய சொத்துகளை பயன்படுத்தாமல் இருப்பதால் என்ன பயன்?
கேரளத்தில் அண்மையில் நேரிட்ட மழை வெள்ளத்துக்கு சுமார் 400 பேர் உயிரிழந்து விட்டனர். ஆதலால், முக்கியமான இந்த 3 கோயில்களின் தங்கம், சொத்தை கேரள மறுகட்டமைப்பு பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்த வேண்டும் என்று அந்தப் பதிவுகளில் உதித் ராஜ் குறிப்பிட்டுள்ளார்.
கேரளத்தில் அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, கேரளத்துக்கு நிவாரணமாக ரூ.600 கோடியை மத்திய அரசு அறிவித்தது. இதேபோல், நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களும், கேரளத்துக்கு பல கோடி ரூபாயை நிவாரணமாக வழங்கின.
கேரளத்துக்கு முதலில் நிவாரணமாக ரூ.2,000 கோடியை மத்திய அரசு உடனடியாக அளிக்க வேண்டும் என்று முதல்வர் பினரயி விஜயன் கோரிக்கை விடுத்தார்.
அதன்பின்னர் அவர் அளித்த பேட்டியின்போது, கேரளத்துக்கு நிவாரணமாக ரூ.20,000 கோடி அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

 

More from the section

சித்தகங்கா பீடாதிபதி ஸ்ரீ சிவக்குமார சுவாமிகள் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திர விவகாரம்: ஊடுருவல் தொடர்பான போட்டியை நடத்தியது காங்கிரஸ்- பாஜக குற்றச்சாட்டு
மின்னணு வாக்குப்பதிவு இயந்திர விவகாரம்: தில்லி போலீஸாரிடம் தேர்தல் ஆணையம் புகார்
கடமை உணர்வு குறைந்து, உரிமை உணர்வு மேலோங்கிவிட்டது: பிரதமர் மோடி
சபரிமலை தொடர்புடைய மனுக்கள் 30ஆம் தேதிக்கு பிறகு விசாரணை: உச்சநீதிமன்றம்