சனிக்கிழமை 23 மார்ச் 2019

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: முதலிடத்துக்கு முன்னேறினார் ஸ்மிருதி மந்தானா

DIN | Published: 02nd February 2019 08:53 PM


ஐசிசியின்  மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தானா முதலிடத்தை பிடித்துள்ளார். 

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நியூஸிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியது. இந்த தொடரின் சதம் மற்றும் ஆட்டமிழக்காமல் 90 ரன்கள் எடுத்த இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தானா ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான தரவரிசையில் மூன்று இடங்கள் முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளார். 

நியூஸிலாந்து அணியின் கேப்டன் எமி சாட்டர்வைட் 10 இடங்கள் முன்னேறி 4-ஆவது இடத்தை பிடித்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் ஒரு இடம் பின்தங்கி 5-ஆவது இடத்தில் உள்ளார். 

பந்துவீச்சை பொறுத்தவரை, இந்திய அணியின் சுழற்பந்து வீராங்கனைகள் பூனம் யாதவ் மற்றும் தீப்தி சர்மா தலா 5 இடங்கள் முன்னேறி முறையே 8-ஆவது மற்றும் 9-ஆவது இடங்களை பிடித்துள்ளனர். மற்றொரு சுழற்பந்து வீராங்கனை எக்தா பீஷ்த் 9 இடங்கள் முன்னேறி 13-ஆவது இடத்தில் உள்ளார். இந்திய அணியின் மூத்த வீராங்கனையான ஜுலான் கோஸ்வாமி ஒரு இடம் முன்னேறி 4-ஆவது இடத்தில் உள்ளார். 

Tags : ICC Women's ODI Rankings Smriti Mandana Mandana No.1 Mandana top spot ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை ஸ்மிருதி மந்தானா மந்தானா முதலிடம்

More from the section

மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை: ஐஏஎஸ் அதிகாரி ஷா ஃபேஸல் அறிவிப்பு
ஐஇஎஸ், ஐஎஸ்எஸ் அதிகாரி பணியிடங்கள்: யுபிஎஸ்சி அறிவிப்பு
ஐஇஎஸ், ஐஎஸ்எஸ் அதிகாரி பணியிடங்கள்: யுபிஎஸ்சி அறிவிப்பு
சகோதரியை பாலியல் வன்கொடுமை செய்ய முடியாத ஆத்திரத்தில் சகோதரனை படுகொலை செய்த பயங்கரவாதிகள்
பணக்காரர்களை கட்டிப்பிடிக்கும் மோடி ஏழைகளை கட்டிப்பிடிக்காதது ஏன்? ராகுல்