சனிக்கிழமை 23 மார்ச் 2019

அங்குதான் இருக்கிறான் மசூத் அசார்; பிடித்துக் கொள்ளுங்கள்: இம்ரான் கானுக்கு பதிலடி கொடுத்த அம்ரீந்தர் சிங் 

DIN | Published: 19th February 2019 08:01 PM

 

சண்டிகார்: உங்களுடைய மசூத் அசார் பஹவல்பூரில்தான் உள்ளார்; அங்கு சென்று பிடித்துக்கொள்ளுங்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் பதிலடி கொடுத்துள்ளார்.

கடந்த 14-ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர், இந்த தாக்குதலில் எங்களுக்கு எந்த தொடர்பும் கிடையாது என பாகிஸ்தான் மறுத்து வருகிறது.

அத்துடன் புல்வாமா தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை எங்களிடம் இந்தியா வழங்கட்டும். நாங்கள் நடவடிக்கையை எடுப்போம். அதை விடுத்து இந்தியா ஏதாவது சாகசம் செய்ய நினைத்தால் தக்க பதிலடிகொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசியுள்ளார்.   

இந்நிலையில் உங்களுடைய மசூத் அசார் பஹவல்பூரில்தான் உள்ளார்; அங்கு சென்று பிடித்துக்கொள்ளுங்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

இம்ரான் கான் அவர்களே, உங்களுடைய மசூத் அசார் பஹவல்பூரில்தான் உள்ளார். பாகிஸ்தான் உளவுத்துறையின் பாதுகாப்புடன்தான் உள்ளார். அங்கு சென்று பிடித்துக்கொள்ளுங்கள். அதனை உங்களால் செய்ய முடியவில்லை என்றால், எங்களிடம் விட்டுவிடுங்கள் நாங்கள் உங்களுக்காக இப்பணியை செய்கிறோம். மும்பை தாக்குதலில் ஆவணங்கள் வழங்கப்பட்டு பாகிஸ்தான் செய்தது என்ன?”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : india jammu kashmir pulwama terror attack pakistan imran khan PM< punjam CM amrinder singh twitter

More from the section

2004-இல் சொத்து மதிப்பு ரூ. 55 லட்சம்; 2014-இல் ரூ. 9 கோடி.. எப்படி? ராகுலுக்கு பாஜக அமைச்சர் கேள்வி
மஹாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசிவாத காங்கிரஸ் இடையே கூட்டணி
காங். தலைவர் பதவியை ராஜிநாமா செய்ய திட்டமிட்டுள்ளேன்: அசோக் சவான் ஆடியோ கசிவால் பரபரப்பு
மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை: ஐஏஎஸ் அதிகாரி ஷா ஃபேஸல் அறிவிப்பு
ஐஇஎஸ், ஐஎஸ்எஸ் அதிகாரி பணியிடங்கள்: யுபிஎஸ்சி அறிவிப்பு