24 மார்ச் 2019

நாடு முழுவதும் உள்ள ஜம்மு காஷ்மீர் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு

DIN | Published: 22nd February 2019 11:32 AM

நாடு முழுவதும் உள்ள ஜம்மு காஷ்மீர் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த 14ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 40  வீரர்கள்  உயிரிழந்தனர். பாகிஸ்தானில் இயங்கிவரும் ஜெய்ஷ் ஏ முகமது பயங்கரவாத அமைப்பு இதற்கு பொறுப்பேற்றுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இதனிடையே இத்தாக்குதலையடுத்து காஷ்மீர் மாணவர்கள் மீது பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக காஷ்மீரைச் சேர்ந்த தாரீக் ஆதிப் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு அவசர வழக்காக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நாடு முழுவதும் உள்ள ஜம்மு காஷ்மீர் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் மாணவர்கள் மீதான தாக்குதல்களை தடுக்க என்னென்னெ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்பது பற்றி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் ஆணை பிறப்பித்துள்ளது.
 

 

More from the section

மோடிக்கும், மம்தாவுக்கும் வேறுபாடில்லை: ராகுல் தாக்கு
கடற்படை தளபதியாக கரம்வீர் சிங் நியமனம்
லோக்பால் தலைவராக பினாகி சந்திரகோஷ் பதவியேற்பு
தனிக்காட்டு ராஜாங்கம் நீடிக்குமா?
2004-2014 காலகட்டத்தில் ராகுலின் வருமானம் அதிகரித்தது எப்படி?