சனிக்கிழமை 23 மார்ச் 2019

பாகிஸ்தானுக்கு இனி தக்காளி ஏற்றுமதி இல்லை: தலைவணங்கச் செய்யும் விவசாயிகளின் தேசப்பற்று 

DIN | Published: 22nd February 2019 10:54 AM


போபால் : புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று பிரதமர் முதல், சாமானியர்கள் வரை கூறிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆனால், இவர்களுக்கெல்லாம் ஒரு முன்னுதாரணமாக மாறியிருக்கிறார்கள் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஜபுவா மாவட்ட விவசாயிகள்.

எங்கள் வீரர்களின் உயிரைக் குடித்த பாகிஸ்தான் நாட்டுக்கு இனி தக்காளி ஏற்றுமதி செய்யப்போவதில்லை என்பதுவே நமது தீரம் மிக்க விவசாயிகளின் முடிவாகும்.

இது பற்றி அவர்கள் கூறியதாவது, நாங்கள் விவசாயிகள். தக்காளியை உற்பத்தி செய்கிறோம். பாகிஸ்தானுக்கும் தக்காளியை ஏற்றுமதி செய்து வருகிறோம். ஆனால் அவர்களோ நமது உணவை சாப்பிட்டுவிட்டு, நமது வீரர்களையே கொல்கிறார்கள். எனவே பாகிஸ்தானுக்கு நாங்கள் தற்போது பதிலடி கொடுக்க உள்ளோம். வேறு எந்த நாட்டில் இருந்தும் பாகிஸ்தானுக்கு தக்காளியை ஏற்றுமதி செய்யவும் விடமாட்டோம் என்கிறார்கள் விவசாயிகள்.

பாகிஸ்தானுக்கு தக்காளியை ஏற்றுமதி செய்வதால் கிடைக்கும் லாபத்தை இனி நாங்கள் நினைத்துக் கூட பார்க்கப்போவதில். நமது நாட்டைப் பாதுகாக்கும் வீரர்கள் இல்லை என்றால் நாம் எப்படி உயிர் வாழ முடியும் என்கிறார்கள் உருக்கமாக.

இந்தியாவில் தற்போது ஒரு கிலோ தக்காளி சராசரியாக ரூ.10 முதல் ரூ.20க்கு விற்பனையாகும் நிலையில், பாகிஸ்தானில் தற்போது ஒரு கிலோ தக்காளி விலை ரூ.180 ஆக உயர்ந்துள்ளது. 

இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு அதிகமான அளவு காய்கறிகளை ஏற்றுமதி செய்யும் அசத்புர் மண்டியில் இருந்து இனி எந்த காய்கறிகளும் அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

More from the section

2004-இல் சொத்து மதிப்பு ரூ. 55 லட்சம்; 2014-இல் ரூ. 9 கோடி.. எப்படி? ராகுலுக்கு பாஜக அமைச்சர் கேள்வி
மஹாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசிவாத காங்கிரஸ் இடையே கூட்டணி
காங். தலைவர் பதவியை ராஜிநாமா செய்ய திட்டமிட்டுள்ளேன்: அசோக் சவான் ஆடியோ கசிவால் பரபரப்பு
மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை: ஐஏஎஸ் அதிகாரி ஷா ஃபேஸல் அறிவிப்பு
ஐஇஎஸ், ஐஎஸ்எஸ் அதிகாரி பணியிடங்கள்: யுபிஎஸ்சி அறிவிப்பு