திங்கள்கிழமை 25 மார்ச் 2019

8 விக்கெட்டுகள் மீதமிருக்க 137 ரன்கள் தேவை.. தென் ஆப்பிரிக்காவில் வரலாறு படைக்குமா இலங்கை? 

DIN | Published: 22nd February 2019 10:33 PM
புகைப்படம்: ஐசிசி/டிவிட்டர்


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியின் 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணியின் வெற்றிக்கு இன்னும் 137 ரன்கள் தேவை என்ற நிலை உள்ளது. 

தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி போர்ட் எலிஸபெத்தில் நேற்று (வியாழக்கிழமை) தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 222 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 154 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, 68 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 128 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, இலங்கை அணியின் வெற்றிக்கு 196 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, இலங்கை அணி தனது 2-ஆவது இன்னிங்ஸை தொடர்ந்தது. 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 2 விக்கெட்டுகளை இழந்து 60 ரன்கள் எடுத்துள்ளது. பெர்னான்டோ 17 ரன்களுடனும், குசால் மெண்டிஸ் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை அணியின் வெற்றிக்கு இன்னும் 137 ரன்கள் தேவை.

இன்றைய 2-ஆவது நாள் ஆட்டத்தில் மட்டும் மொத்தம் 18 விக்கெட்டுகள் வீழ்ந்தது. 

இந்த போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றால் தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் முதல் ஆசிய அணி என்ற சாதனையை படைக்கும். இதற்கு முன் தென் ஆப்பிரிக்க மண்ணில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் மட்டும் தான் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.  

More from the section

ஐபிஎல் 2019: ஹைதராபாத்தை சாய்த்தது கொல்கத்தா
பெங்களூருவை நொறுக்கியது சென்னை
மும்பையை 37 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது தில்லி
ராஜஸ்தான்-பஞ்சாப் இன்று மோதல்
யூரோ 2020:ஸ்பெயின், இத்தாலி வெற்றி