வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

மனோகர் பாரிக்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

DIN | Published: 24th February 2019 03:07 AM

கோவா முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான மனோகர் பாரிக்கர், மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கோவா முதல்வர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கோவா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பாரிக்கர் சனிக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. அடுத்த 48 மணி நேரம், மருத்துவமனையில் பாரிக்கர் அனுமதிக்கப்பட்டிருப்பார்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரிக்கர் அனுமதிக்கப்பட்டிருப்பதை அடுத்து, கோவா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, அமெரிக்கா மற்றும் மும்பை, தில்லி மருத்துவமனைகளில் பாரிக்கர் சிகிச்சை எடுத்தார். பின்னர் கோவா திரும்பி பணிகளை பாரிக்கர் கவனித்து வந்தார். இதனிடையே, பாரிக்கரை அவரது இல்லத்தில் சந்தித்த அமைச்சர் விஜய் சர்தேசாய், அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக வெளியான தகவலை மறுத்தார்.

More from the section

அதிமுக அணியில் பாஜக இடம்பெற்றிருப்பது  ஏற்புடையது அல்ல:  சுப்பிரமணியன் சுவாமி
பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, கந்தூரி தேர்தலில் போட்டியில்லை
அரக்கோணத்தில் சிக்னல் பணிகள்: ஏப். 4 முதல் ரயில் சேவைகளில் மாறுதல்கள்: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
25 ஆண்டுகளில் காசநோயை  முற்றிலுமாக ஒழிக்க முடியும்: சர்வதேச நிபுணர்கள் கருத்து
இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய மாட்டோம்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு