சனிக்கிழமை 20 ஜூலை 2019

ரோஸ்வேலி முறைகேடு: பிரபல நடிகைக்கு அழைப்பாணை

DIN | Published: 11th July 2019 02:48 AM


ரோஸ்வேலி நிறுவன மோசடி தொடர்பான வழக்கில் வங்க மொழியில் பிரபல நடிகையான ரிதுபர்ணா சென்குப்தாவுக்கு அடுத்த வாரம் நேரில் ஆஜராகக்கோரி அமலாக்கத் துறை புதன்கிழமை அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது.
முன்னதாக, இதே வழக்கில் இன்னொரு நடிகர் பிரோசென்ஜித் சாட்டர்ஜிக்கு அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை சம்மன் அனுப்பியது. அந்த சம்மனில் வரும் 19ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சாட்டர்ஜிக்கு அமலாக்கத் துறை உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் நடிகை ரிதுபர்ணா சென்குப்தாவுக்கும் அமலாக்கத் துறை தற்போது சம்மன் அனுப்பியுள்ளது. இதுகுறித்து ரிதுபர்ணா சென்குப்தாவின் பதிலை அறிந்து கொள்வதற்கு அவரின் செல்லிடப்பேசி எண்ணுக்கு பலமுறை செய்தியாளர்கள் அழைப்பு மேற்கொண்டனர். ஆனால் அந்த முயற்சிக்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை.

More from the section

மழையில் நனையும் கேரளம்: 4 அணைகள் திறப்பு: 3 பேர் பலி; ரெட் அலர்ட்!
சித்துவின் ராஜிநாமாவை ஏற்றார் பாஞ்சாப் முதல்வர்
கடும் வறட்சியால் அதிருப்தி அடைந்த விவசாயிகள் செய்த விநோத விளம்பரம்
எ‌ன்ஆ‌ர்சி இறுதிப் ப‌ட்டிய‌ல்: கெடுவை நீ‌ட்டி‌க்குமாறு உ‌ச்சநீதிம‌ன்ற‌‌த்தி‌ல் ம‌த்திய அரசு கோரி‌க்கை
இ‌ந்திய க‌ம்யூனி‌ஸ்‌ட் க‌ட்சியி‌ன் பொது‌ச் செயலாளராகிறா‌ர் டி.ராஜா