சனிக்கிழமை 20 ஜூலை 2019

அமர்நாத் யாத்திரை: 11-ஆவது குழுவாக 5,486 பேர் பயணம்

DIN | Published: 12th July 2019 01:16 AM


அமர்நாத் குகைக்கோயிலில் உள்ள பனிலிங்கத்தை தரிசனம் செய்வதற்கு, 11-ஆவது குழுவாக 5,486 பேர் வியாழக்கிழமை யாத்திரை புறப்பட்டுச் சென்றனர்.
தெற்கு காஷ்மீரில் இமயமலையில் 3,880 மீட்டர் உயரத்தில் இருக்கும் அமர்நாத் குகைக் கோயிலில் உள்ள பனிலிங்கத்தை தரிசனம் செய்வதை ஹிந்து மதத்தினர் தங்களது புனித கடமையாக கருதுகின்றனர். இதையொட்டி, அமர்நாத்துக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் புனித பயணம் செல்கின்றனர்.
நிகழாண்டுக்கான அமர்நாத் யாத்திரை, ஜம்முவில் கடந்த மாதம் 30-ஆம் தேதியும், காஷ்மீரில் ஜூலை 1-ஆம் தேதியும் தொடங்கியது. இதையடுத்து பக்தர்கள் யாத்திரை சென்று வருகின்றனர்.
இந்நிலையில், 11-ஆவது குழுவாக 5,486 பேர் அமர்நாத்துக்கு வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றனர். 5,486 பேரில் 4,004 பேர் ஆடவர்கள். 1,245 பேர் பெண்கள். 10 பேர் குழந்தைகள், 227 சீயர்கள் ஆவர். இவர்கள் அனைவரையும் ஏற்றிக் கொண்டு, ஜம்முவிலுள்ள பகவதிநகர் முகாமில் இருந்து 221 வாகனங்கள், பகல்காம் மற்றும் பல்தால் பகுதிகளுக்கு புறப்பட்டுச் சென்றன.
பகல்காம் பாதை வழியாக 3,357 யாத்ரீகர்களும், பல்தால் பாதை வழியாக 2,129 யாத்ரீகர்களும் அமர்நாத் கோயிலுக்கு செல்கின்றனர். யாத்ரீகர்களின் வாகனங்களுக்கு பாதுகாப்பாக சிஆர்பிஎஃப் படைப்பிரிவினரின் வாகனங்களும் சென்றுள்ளன.
அமர்நாத் யாத்திரை தொடங்கியது முதல், பகவதிநகர் முகாமில் இருந்து இதுவரை 53,032 பேர் புனித பயணம் சென்றுள்ளனர். 
அமர்நாத் யாத்திரை வரும் ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி  வரை நடைபெறவுள்ளது. அமர்நாத் யாத்திரையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று அஞ்சப்படுவதால், யாத்திரை நடைபெறும் வழித்தடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2018-ஆம் ஆண்டில் அமர்நாத் குகைக் கோயிலில் 2.85 லட்சம் யாத்ரீகர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கடந்த 2015-ஆம் ஆண்டில் 3.52 லட்சம் பேரும், கடந்த 2016-ஆம் ஆண்டில் 3.20 லட்சம் பேரும், கடந்த 2017-ஆம் ஆண்டில் 2.60 லட்சம் பேரும் அமர்நாத் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
 

More from the section

குடிபோதையில் கைக்குழந்தையைக் கொன்ற கொடூரத் தந்தை
மழையில் நனையும் கேரளம்: 4 அணைகள் திறப்பு: 3 பேர் பலி; ரெட் அலர்ட்!
சித்துவின் ராஜிநாமாவை ஏற்றார் பஞ்சாப் முதல்வர்
கடும் வறட்சியால் அதிருப்தி அடைந்த விவசாயிகள் செய்த விநோத விளம்பரம்
எ‌ன்ஆ‌ர்சி இறுதிப் ப‌ட்டிய‌ல்: கெடுவை நீ‌ட்டி‌க்குமாறு உ‌ச்சநீதிம‌ன்ற‌‌த்தி‌ல் ம‌த்திய அரசு கோரி‌க்கை