புதன்கிழமை 23 ஜனவரி 2019

22. புத்தகச் சிந்தை!

21. பெண்களோ! பெண்கள்!
20. சுருட்டிய காலண்டர்
19. புகைப் பிடிக்காத பொஸ்கி!
18. ஆடுதுறை ஆராமுதன்
17. குழல் இனிது! விசில் இனிது!
16. சலூனில் இந்தி
15. ரகுபதி ராகவ ராஜாராம்
14. நிஜ வயதுக்கு வராதவர்கள்!
13. கஜா!

ஜீவ்ஸ் சிவசாமி

நகைச்சுவை வள்ளல்கள் என்றால் என் நினைவுக்கு வருபவர்கள் பி.ஜி. உட்ஹவுஸ், கல்கி மற்றும் தேவன் மட்டும்தான். உட்ஹவுஸின் சிறப்புக் கதாபாத்திரங்கள் ஜீவ்ஸ் மற்றும் அவருடைய எஜமானன் பெர்ட்டி ஊஸ்ட்டர். பின்னவர் பசையுள்ளவர்; ஆனால் கொஞ்சம் அசடு. முன்னவரின் உடம்புபூராக மூளை இருப்பதன் காரணம் மீன் சாப்பிடுவதினாலாம். ஊஸ்ட்டரை ஜீவ்ஸ் எவ்வாறு மறைமுகமாகக் கிண்டலடிக்கிறார். இக்கட்டிலிருந்து காப்பாற்றுகிறார் என்பதைப் படித்துத்தான் உணர வேண்டும். இவர்கள் இருவரையும் வைத்து நகைச்சுவை விருந்து படைத்த உட்ஹவுஸின் கற்பனை வளமும் ஆங்கிலத்தின் செழிப்பும், நவீனமும், 90 ஆண்டுகள் தாண்டியும் படிக்க சுகமாக, இதமாக இலக்கியத்தரத்துடன் மிளிர்வது கண்கூடு. இவர்கள் இருவரும் தமிழ்நாட்டில் இருந்தால் எப்படி இருக்கும் என்கிற கற்பனையின் விளைவே இத்தொடர். ஊஸ்ட்டர் ரோலில் டாக்டர் பஞ்சாமி; ஜீவ்ஸ் ரோலில் சிவசாமி. மற்றபடி கதை, சம்பவம், உரையாடல் எல்லாம் என்னுடைய சொந்தக் கற்பனையே. ரசிப்பீர்கள், சிரிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

ஜே.எஸ். ராகவன்.

ஜே.எஸ்.ராகவன் - 1964 முதல் ஆங்கிலத்திலும், 1980 முதல் தமிழிலும் இந்தியாவின் பிரபல ஏடுகளில் நகைச்சுவைக் கட்டுரைகள், கதைகள் எழுதிவருகிறார். சென்னையில் வெளிவரும் வட்டார ஏடுகளான அண்ணாநகர் மற்றும் மாம்பலம் டைம்ஸில் தமாஷா வரிகள் என்கிற பத்தியைத் தொடர்ந்து 14 வருடங்களுக்கும் மேலாக எழுதி வருகிறார். தொடர்ந்து எழுத அருளாசி வழங்குபவர் வேழமுகத்து விநாயகன் என்றும், ஊக்குவிப்பவர்கள் பி.ஜி.உட்ஹவுஸ், தேவன், கல்கி மற்றும் தி.ஜானகிராமன் என்றும் நன்றியுடன் கூறும் இவர், 50 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபல கட்டுமான நிறுவனத்தின் மூத்த அதிகாரியாகப் பணிபுரிந்தவர். Laughing Tablets என்கிற ஆங்கிலத் தொகுப்பு, சிவசாமி துணை என்கிற நாவலை இரண்டாவது பாகமாக உள்ளடக்கிய சிவசாமியின் சபதம் என்கிற முழுநீள நகைச்சுவை நாவல் உள்பட, இதுவரை இவர் எழுதி வெளிவந்துள்ள புத்தகங்களின் எண்ணிக்கை 25. தேவன் அறக்கட்டளை விருதுபெற்ற இவருக்குப் பிடித்த சவால் வாசகம்: ‘அறிவில் சிறந்தவர்களைச் சிரிக்கவைப்பது கடினம்!’