வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

வாசகர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு! பினாக்கிள் புக்ஸின் ‘யதி’ (பா.ராகவன்), ‘நேரா யோசி’ (சுதாகர் கஸ்தூரி) நூல்களுக்கான முன்வெளியீட்டுத் திட்டம்!

DIN | Published: 07th December 2018 03:53 PM

 

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் பினாக்கிள் புக்ஸ் பதிப்பகம் சார்பில், 2019 ஜனவரியில் நடைபெற உள்ள சென்னைப் புத்தகக் காட்சிக்காகப் புத்தகங்கள் தயாராகி வருகின்றன.

அவற்றில், தினமணி இணையதளத்தில் (www.dinamani.com) தொடராக வெளியான பா. ராகவன் எழுதிய ‘யதி’ (நாவல்), சுதாகர் கஸ்தூரி எழுதிய ‘நேரா யோசி’ (சுய முன்னேற்றம்) ஆகிய இரு புத்தகங்களுக்கும் முன்வெளியீட்டுத் திட்டம் அறிவிக்கப்படுகிறது.

பா. ராகவனின் ‘யதி’ (செம்பதிப்பு, ராயல் சைஸ், தரமான தாள் மற்றும் கெட்டி அட்டை) புத்தகத்தின் விலை ரூ.1000.

சுதாகர் கஸ்தூரியின் ‘நேரா யோசி’ (டெம்மி சைஸ்) புத்தகத்தின் விலை ரூ.150.

முன்வெளியீட்டுத் திட்டத்தின் கீழ் இப்புத்தகங்களைப் பெற பதிவு செய்பவர்களுக்கு, ரூ.1000 மதிப்புள்ள ‘யதி’ புத்தகம் ரூ.700-க்கும், ரூ.150 மதிப்புள்ள ‘நேரா யோசி’ புத்தகம் ரூ.101-க்கும் வழங்கப்படும். (கூரியர் செலவு தனி).

முன்வெளியீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்ய டிசம்பர் 30-ம் தேதி கடைசி நாளாகும்.

மேற்கண்ட இரு நூல்களையும் முன்வெளியீட்டுத் திட்டத்தின் கீழ் வாங்க பதிவு செய்ய விரும்புபவர்கள், கீழ்க்கண்ட வங்கிக் கணக்கில் பணம் செலுத்தவும். கூரியரில் நூல்களைப் பெற விரும்புபவர்கள், அதற்குரிய கட்டணத்தையும் சேர்த்துக்கொள்ளவும். (கூரியர் கட்டணம்: தமிழ்நாடு ரூ.40, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ரூ.45, பிற மாநிலங்கள் ரூ.150).

வங்கிக் கணக்கு விவரம்

Account Name : Express Network Pvt Ltd

Account No. : 30058202893

Bank : State Bank of India

Branch : Ambattur Industrial Estate, Chennai - 58.

IFS Code : SBINO014376

அல்லது, www.pinnaclebooks.in என்ற இணையதளத்திலும் ஆன்லைனில் பணம் கட்டி முன்பதிவு செய்துகொள்ளலாம்.

வங்கிக் கணக்கில் பணம் செலுத்திய தகவலுடன், உங்கள் முழு முகவரியை எங்கள் அலுவலகத்துக்குத் தெரியப்படுத்தவும்.

Pinnacle Books, M/s. Express Network Pvt Ltd., Express Gardens, 29, Second Main Road, Ambattur Industrial Estate, Chennai - 600 058.

2019, ஜனவரியில் நடைபெறும் சென்னைப் புத்தகக் காட்சியில், தினமணி - தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் அரங்கில், (தனி அரங்கு அமையும்பட்சத்தில் பினாக்கிள் புக்ஸ் அரங்கில்) பணம் கட்டிய ரசீதைக் காட்டி, ஜனவரி 10-ம் தேதி முதல் புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளலாம். வெளியூர் வாசகர்களுக்கும், கூரியரில் புத்தகங்கள் அனுப்பிவைக்கப்படும்.

மேலதிக விவரங்களுக்கு, பினாக்கிள் புக்ஸ் பதிப்பகத்தின் விற்பனை மேலாளர் திரு. செந்தில் ராமலிங்கம் அவர்களை, 9789865544 (செல்பேசி), 044-23457601-07, Entn 533 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.

குறிப்பு

வங்கிக் கணக்கு மற்றும் www.pinnaclebooks.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே பணம் செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும்.

Tags : சுதாகர் கஸ்தூரி நேரா யோசி yathi யதி Pa. Raghavan பா. ராகவன் புத்தகங்கள் சென்னைப் புத்தகக் காட்சி முன்வெளியீட்டுத் திட்டம் பினாக்கிள் புக்ஸ் sudhakar kasturi nera yosi pinnacle books chennai book fair pre-release order

More from the section

மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகள் பட்டியல்: இந்தியாவுக்கு பின்னடைவு
வீட்டுமனை, மருத்துவம், ஏ.சி.- பிரிட்ஜ் அனைத்தும் ஒரே இடத்தில்! கிராண்ட் எக்ஸ்போ சென்னையில் இன்று தொடக்கம்
180 அரிய வகை தாவரங்கள் குறித்த நூல் வெளியீடு
நாகர்கோவில்-தாம்பரத்துக்கு சுவிதா ரயில் இயக்கம்
தமிழகத்தில் 21 ஆயிரம் பேருக்கு காசநோய் பாதிப்பு