திங்கள்கிழமை 25 மார்ச் 2019

வைரமுத்துவுக்கு உண்மை கண்டறியும் சோதனை செய்ய வேண்டும்: பாடகி சின்மயி 

DIN | Published: 14th October 2018 03:35 PM


சென்னை: வைரமுத்துவுக்கு உண்மை கண்டறியும் சோதனைதான் செய்ய வேண்டும் என்று பாடகி சின்மயி கூறியுள்ளார்.

மீ டூ (நான் கூட) எனும் ஹேஷ்டேக் கடந்த திங்கள்கிழமை முதல் கோலிவுட்டை உலுக்கி வருகிறது. அதிலும் குறிப்பாக கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி தெரிவித்து வரும் பாலியல் குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முழுக்க முழுக்கப் பொய்யானவை என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முழுக்க முழுக்கப் பொய்யானவை. முற்றிலும் உள்நோக்கம் கொண்டவை. 

அந்த குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமானால் சம்பந்தப்பட்டவர்கள் தாராளமாக என் மீது வழக்குத் தொடரலாம். நீதிமன்றத்தில் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். 

கடந்த ஒரு வாரமாக மூத்த வழக்குரைஞர்களுடனும், ஆழ்ந்த அறிவுள்ளோரிடமும் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தேன். தகுந்த ஆதாரங்களைத் தொகுத்து திரட்டி வைத்திருக்கிறேன்.     

இனி யாரும் நான் நல்லவனா? கெட்டவனா? என்பதை இப்போது யாரும் கூற வேண்டியதில்லை. நீதிமன்றம் கூறட்டும். நீதிக்குத் தலைவணங்குகிறேன். நன்றி என தெரிவித்துள்ளார்.   

இந்தநிலையில் வைரமுத்துவுக்கு உண்மை கண்டறியும் சோதனை தான் செய்ய வேண்டும் என்று பாடகி சின்மயி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் இவ்வாறு கூறியிருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : vairamuthu Chinmayi detector test

More from the section

மக்களவை, பேரவை இடைத் தேர்தல்கள்வேட்புமனு தாக்கல்:  நாளை கடைசி
மத்தியில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது: நவீன் பட்நாயக்
மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் அறிவிப்பு: கமல்ஹாசன் போட்டியிடவில்லை
பாஜக சார்பில் இதுவரை 306 வேட்பாளர்கள் அறிவிப்பு
தமிழகத்தில் மட்டும்தான் இந்த அளவு நெருக்கடி!: முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா