24 பிப்ரவரி 2019

பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக எத்தனால் எரிபொருள்களை பயன்படுத்தவும்: நிதின் கட்கரி அறிவுறுத்தல்

DIN | Published: 11th September 2018 11:53 AM


பெட்ரோல், டீசல் ஆகியவற்றிற்கு பதிலாக உயிரி எரிபொருளான எத்தனாலை பயன்படுத்துமாறு விவசாயிகளுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவுறுத்தினார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் ராஞ்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், மத்திய சாலை, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டு பேசுகையில், பெட்ரோல், டீசல் ஆகியவற்றிற்கு பதிலாக உயிரி எரிபொருளான எத்தனாலை பயன்படுத்துமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார். 

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவால் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்தலாம். எத்தனால் உற்பத்திக்காக பெட்ரோலியத்துறை அமைச்சகம் 5 ஆலைகளை அமைத்து வருகிறது. மரக்கழிவுகள் மற்றும் மாநகர குப்பைகளில் இருந்து எத்தனால் தயாரிக்க உள்ளதாகவும், இதனால் எத்தனால் கலந்த பெட்ரோல் லிட்டர் ரூ.55க்கும், டீசல் லிட்டர் ரூ.50க்கும் கிடைக்கும் என அவர் குறிப்பிட்டார்.

ஆண்டு ஒன்றுக்கு 8 லட்சம் கோடி ரூபாய்க்கு அரசு கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது. எத்தனாலை பெட்ரோல், டீசலுடன் கலந்து உபயோகிப்பதால் அரசுக்கு பணம் மிச்சமாகும் என்றும் கட்கரி தெரிவித்தார்.

எரிபொருளின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக, அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு குறைவதும், கச்சா எண்ணெயை டாலர் மூலமாகவே வாங்க வேண்டியிருப்பதே நமக்கு பிரச்னையை உருவாக்கி உள்ளது. ஈரான் விவகாரம், வெனிசுலா மற்றும் துருக்கியில் நிலவும் நிதி நெருக்கடி போன்ற சர்வதேச காரணிகளும் கச்சா எண்ணெய் உற்பத்தியில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இவைகளை எல்லாம் சரி செய்வது இந்தியாவின் கைகளில் இல்லை என்பதால், பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது என பெட்ரோலியத்துறை தர்மேந்திர பிரதான் குற்றம்சாட்டி இருந்தார். 

Tags : nitin gadkari Dharmendra Pradhan Durg (Chhattisgarh) Union Minister for Road Transport and Highways replacement for petrol and diesel

More from the section

மோடி ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது: ராகுல்காந்தி
62 பந்தில் 162... 20 ஓவரில் 278... ஸஸாய் மற்றும் ஆப்கானிஸ்தான் படைத்த சாதனை விவரம்
தமிழகத்தில் பாஜக காலூன்றவே முடியாது: மு.க. ஸ்டாலின் ஆவேசம்
20 ஓவரில் 278 ரன்கள்: ஆப்கானிஸ்தான் அட்டகாச ஆட்டம் 
கூட்டணிக்காக கொள்கையை விட்டு பேரம் பேசுவதில்லை: ராமதாஸ் பேச்சு