செவ்வாய்க்கிழமை 22 ஜனவரி 2019

காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

DIN | Published: 11th September 2018 08:16 AM


குப்வாரா: ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குப்வாராவில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற சண்டையில், 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

குப்வாராவில் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி மேற்கொண்டிருப்பதாக ராணுவத்துக்கு உளவுத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியை ராணுவ வீரர்கள் சுற்றிவளைத்தனர்.

அப்போது அவர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். இதைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை மூண்டது. இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 

இதன்மூலம், காஷ்மீருக்குள் ஊடுருவ பயங்கரவாதிகள் மேற்கொண்ட முயற்சியை இந்திய ராணுவ வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்தனர். 

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, துப்பாக்கி சண்டை நடைபெற்ற பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் கூடுதலாக குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

Tags : Kupwara 2 terrorists killed Jammu And Kashmir terrorists Guloora area

More from the section

தனுஷின் 'ரவுடி பேபி' பாடலைப் பாராட்டி வாங்கிக் கட்டிக் கொண்ட நடிகை 
என்னாது.. மீண்டும் அவரைக் காணவில்லையா?? அதிருப்தியில் கட்சியினர்!
2018-ஆம் ஆண்டின் அணிகளை வழிநடத்தும் விராட் கோலி: இடம்பிடித்தவர்கள் யார்-யார்?
மேகதாது அணை: கர்நாடகத்தின் விரிவான திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்!
2018-ல் என் நினைவில் நின்றவை: ஐசிசி விருதுகள் குறித்து மனம் திறந்த விராட் கோலி