திங்கள்கிழமை 25 மார்ச் 2019

‘மதுவந்தி’ என்றொரு ராகமிருக்கிறது தெரியுமா?

By ஹரிணி வாசுதேவ்| Published: 07th August 2018 03:25 PM

 

நட்கர் ஒய்.ஜி. மகேந்திரனின் மகள் மதுவந்தியைத் தெரியும் தானே? அவரது சமீபத்திய நேர்காணலொன்றில் தனது பெயருக்கான காரணத்தை அவர் விளக்கினார். மதுவந்தி என்றால் அது ஒரு ராகத்தின் பெயராம். அது ஒரு ஹிந்துஸ்தானி ராகம் என்கிறார். இந்த ராகம் 59 வது மேளகர்த்தாவான தர்மவதியின் ஜன்யம் ஆகும். இந்த ராகத்தை 'துக்கடா' என்றும் அழைப்பார்கள். ஜனரஞ்ஜகமான பாடல்களுக்கு அதிகமாக பயன் படுத்துவார்களாம். மது என்றால் தேன் என்றொரு பொருளிருக்கிறதில்லையா? அதற்கேற்ப இந்த ராகத்தைக் கேட்கக் கேட்க காதில் தேனாறு பாயும் என்கிறார்கள். 

மதுவந்தி ராகத்துக்கான வாத்தியஸ்வரங்கள்...

இதன் வாத்தியஸ்வரம்...

மதுவந்தி ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்

மதுவந்தி அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்

ஆரோகணம்: ஸ க ம ப நி ஸ
அவரோகணம்: ஸ நி த ப ம க ரி ஸ

இந்த ராகத்தில் அமைந்த கர்நாடக இசை பாடல்கள்...

  • கண்ட நாள் முதல் (N.S.ராமசந்திரன்)
  • நரஜன்ம பந்தாகே (புரந்தர தாசர்)
  • எப்படி நான் அழைப்பேன் (சிதம்பரநாதன்)
  • நின்னையே ரதி (பாரதியார்)
  • அனுமனை அனுதினம் நினை மனமே - ராகமாலிகை
  • நினையே -தில்லானா (லால்குடி ஜெயராமன்)
  • தில்லானா (கணேஷ் & குமரேஷ்)

திரையிசைப் பாடல்கள்...

நந்தா என் நிலா - நந்தா என் நிலா - தட்சிணாமூர்த்தி.


 

ஹலோ மை டியர் - மன்மத லீலை - எம். எஸ். விஸ்வநாதன்

 

 

 

Tags : madhuvandhi rag மதுவந்தி ராகம் லைஃப்ஸ்டைல் கலை lifestyle art

More from the section

விடியோக்களால் புகைப்படங்களின் இடத்தை ஒருக்காலும் ரீபிளேஸ் செய்ய முடியாது! 
தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையின் ‘பேச்சுக் கச்சேரி 2018’ நிகழ்ச்சியின் காணொளி!
கவிஞர் கலாப்ரியாவுக்கு ‘மனோன்மணியம் சுந்தரனார் விருது’!
தமிழ் இசையின் பரிணாம வளர்ச்சியில் கலாசார பரிமாற்றத்தின் பங்கு!
கர்னாடக சங்கீதம் இந்துக் கடவுள்களுக்கு மட்டுமில்லை இனிமேல் இயேசு, அல்லாவுக்கும் உண்டு: பாடகர் டி எம் கிருஷ்ணா!