வியாழக்கிழமை 17 ஜனவரி 2019

உங்கள் முகம் தெய்விக அழகுடன் தேஜஸாக வேண்டுமா? இதோ டிப்ஸ்

By  - முத்தூஸ்| Published: 10th August 2018 05:49 PM

ஆப்பிள் உடல் நலத்திற்கு எவ்வளவு நன்மை செய்கிறதோ அதேப்போன்று இதில் உள்ள விட்டமின்கள், மினரல் சத்துக்களும் சருமத்தில் உள்ள சுருக்கங்கள், கருமையைப் போக்கி மினுமினுப்பை அள்ளித் தந்து அழகு சேர்க்கிறது. ஆப்பிளைக் கொண்டு என்னவகையான அழகு செய்யலாம் பார்ப்போம்:
 
ஆப்பிளில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. இவை சருமத்தில் ஏற்படும் பாதிப்பை சரி செய்கிறது. வாரம் ஒரு முறை ஆப்பிள் பேக் போட்டால் முகம் இளமையாக இருக்கும்.
 

முகப்பருவைத் தடுக்க

ஆப்பிளின் சதைப்பகுதியை மசித்து, தயிருடன் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கடலைமாவு கொண்டு கழுவி விட வேண்டும். முகப்பருக்கள் உண்டாவதை தடுக்கிறது.
 

 பளிச் தோற்றத்திற்கு

ஆப்பிள், வாழைப்பழம் இரண்டையும் மசித்து ஒன்றாக கலந்து சிறிது தேன் கலந்து முகத்தில் பூசி வர, அற்புதமான ஸ்கின் டோனராக இது வேலை செய்து சருமத்தில் ஜொலிப்பைத் தரும். மிருதுவாகவும், பளிச்சென்ற தோற்றத்தையும் தரும்.
 

தோல் வறட்சி நீங்க
 ஆப்பிளை மசித்து அதனுடன் சில துளி கிளிசரின் சேர்த்து முகத்தில் தடவி வர . மழைக்காலத்தில் சருமம் வறண்டு போவதை தடுக்கும்.
 

முகத்தில் உள்ள கருமையை அகற்ற

ஆப்பிளில் சாறு எடுத்து, அதனை உடல் முழுவதும் தடவி, காய்ந்ததும் பயத்தம் மாவு தேய்த்துக் குளித்து வர, புற ஊதாக்கதிர்களின் தாக்கத்திலிருந்து காப்பாற்றும். வெய்யிலினால் சருமத்தில் ஏற்படும் கருமையை அகற்றும்.
 

ஜொலிப்பை பெற

திடீரென ஏதாவது விசேஷத்திற்கு அல்லது பார்ட்டிக்கு போகவேண்டுமானால், அந்த சமயங்களில் ஆப்பிள் கை கொடுக்கும். ஆப்பிள்சாறு மற்றும் மாதுளம்பழச்சாறு இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக கலந்து, முகத்தில் தடவி பத்துநிமிடம் வைத்திருந்து காய்ந்தபின் முகத்தை கழுவினால் முகம் ஜொலிக்கும்.
 

கரும்புள்ளிகள் மறைய

முகத்தில் கரும்புள்ளிகள், கருந் திட்டுகள் இருந்தால் அதற்கு ஆப்பிளை மசித்து அதனுடன் சிறிது பால் சேர்த்து கலந்து முகத்தில் பேக்காக போட்டு வர, ஒரு வாரத்திலேயே வித்தியாசம் தெரியும்.
 

Tags : facial apple pimple ஆப்பிள் அழகு முகப் பொலிவு

More from the section

இவ்ளோ பெரிய கூந்தலா? வியக்க வைத்த கின்னஸ் சாதனைப் பெண்!
உங்கள் தலைமுடி கருப்பாக இல்லை என்ற கவலை இனி வேண்டாம்! 
உங்கள் உடல் எடையை குறைக்க எளிமையான ஒரு வழி!
உங்கள் புருவம் அடர்த்தியாகவும் மிக அழகாகவும் இருக்க இதையெல்லாம் பின்பற்றுங்கள்!
லேடீஸ் ஸ்பெஷல்! வேண்டாத ரோமங்களை அகற்ற எளிமையான வழிகள்!