24 மார்ச் 2019

‘கார்த்திகை ஸ்பெஷல் அவல்பொரி உருண்டை’ வீட்டிலும் செய்யலாம் ஈஸி தான்!

By கஸ்தூரி ராஜேந்திரன், தேனி.| DIN | Published: 24th November 2018 01:32 PM

 

தேவையான பொருட்கள்:

செய்முறை:

அடுப்பில் வாணலியை ஏற்றி 1 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு. காய்ந்ததும் பொடியாக நறுக்கி வைத்த தேங்காய் வில்லையைச் சேர்த்து தேங்காய் உலர்ந்து சிவக்கும் வரை நன்கு பொரிக்கவும். பின்பு அதனுடன் ஒன்றிரண்டு ஏலக்காயை உறித்துச் சேர்த்து கூடவே ஒரு டீஸ்பூன் சுக்கும் சேர்த்துக் கிளறவும். பின்பு அதனோடு 4 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலையும் சேர்த்து கடலை நொறு நொறுவென சிவக்கப் பொரியும் வரை வறுத்து எடுத்து தனியாக ஒரு கப்பில் வைக்கவும்.

வெல்லப்பாகு தயாரிக்கும் முறை:

200 கிராம் பொறிக்கு 100 கிராம் அல்லது 150 கிலோ கிராம் வெல்லம் தேவைப்படலாம். முதலில் வெல்லத்தைப் பொடியாக்கி நீரில் கரைத்து வடிகட்டி தூசு, துரும்பு நீக்கி ஒரு கப்பில் எடுத்துக் வைத்துக் கொள்ளவும். பிறகு அடுப்பிலேற்றிய வாணலியில் வெல்லக் கரைசலை ஊற்றிக் காய்ச்ச வேண்டும். பாகு காய்ச்சும் போது கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். அத்துடன் பாகு கம்பிப் பதம் வந்ததும் இறக்கி இளஞ்சூடான பதம் வந்ததும் அதில் முன்னரே வறுத்து வைத்த பொருட்களைப் போட்டுக் கலக்கவும். பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதே சூட்டில் முன்பே எடுத்து வைத்த அரிசிப் பொரியையும் போட்டுப் பிரட்டவும்.

இளஞ்சூடாக இருக்கும் போதே உருண்டை பிடித்தால் கடைகளில் விற்கப்படுவதைப் போன்றே நன்கு உருண்டை பிடிக்க வரும். ஆற வைத்து ஒரு பிளாஸ்டிக் கண்டெய்னரில் போட்டு ஃப்ரிஜ்ஜில் எடுத்து வைத்துக் கொண்டால் குழந்தைகளுக்கு தினமொன்றாகப் பள்ளிகளுக்கு கொடுத்து விடலாம்.

அரிசிப் பொரியும், பொட்டுக் கடலையும் எளிதில் ஜீரணமாகக் கூடியதென்பதோடு வளரும் குழந்தைகளின் ஆரோக்யத்திற்கும் மிகவும் உகந்தது. அத்துடன் பனை வெல்லம் வேறு சேர்க்கிறோமா அதனால் கிடைக்கும் சத்துக்களும் வளரிளம் குழந்தைகளுக்கு தேவையானவையே! சுக்கு சேர்ப்பதால் அஜீரணக் கோளாறைத் தவிர்க்கலாம். ஏலக்காய் வாசம் சாப்பிடத் தூண்டும்.

நம்மூரில் ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு திருவிழாவும், பண்டிகையும் வந்து கொண்டே தான் இருக்கும். இது கார்த்திகை மாதத்திற்கு உகந்த அவல்பொரி உருண்டை ரெஸிப்பி. செய்து சாப்பிட்டுப் பார்த்து விட்டு அந்த அனுபவத்தை எங்களிடம் பகிருங்கள்.

Tags : karthigai special aval pori urundai recipe கார்த்திகை ஸ்பெஷல் அவல்பொரி உருண்டை ரெஸிப்பி

More from the section

அசத்தும் ருசியுடன் அடை செய்ய இதைப் பின்பற்றுங்கள்!
தொப்பை மற்றும் உடல் பருமனுக்கான எளிய பாரம்பரிய முறை தீர்வு - ஓர் அறிவியல் விளக்கம்
சிவராத்திரி ஸ்பெஷல் இனிப்பு ‘தம்பிட்டு’ ரெசிப்பி!
எண்ணெயே இல்லாமல் அப்பளம் பொரிக்கலாம்... எப்படி? இதோ இப்படி!
‘என் டி ஆர் கதநாயகுடு’ வில் வித்யாபாலன் சொதப்பியது நிஜமா?!