வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

‘என் டி ஆர் கதநாயகுடு’ வில் வித்யாபாலன் சொதப்பியது நிஜமா?!

By சரோஜினி| DIN | Published: 22nd February 2019 11:37 AM

 

ஜனவரி மாதம் ரிலீஸ் ஆன ‘என் டி ஆர் கதாநாயகுடு’ சினிமாவில் மறைந்த ஆந்திர முதல்வரும் நடிகருமான என் டி ஆரின் முதல் மனைவி பசவ தாரகமாக நடிகை வித்யாபாலன் நடித்திருந்தார். படத்தில் வித்யா பாலனுக்கு தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்த அதிகம் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. சில காட்சிகளில் மட்டுமே வருவதால் செட் பிராப்பர்டி போலத் தோற்றமளிக்கும் வகையில் இருந்தது அவரது முக்கியத்துவம். பொதுவாக இந்தியில் வித்யாபாலன் சூப்பர் ஸ்டார் நடிகையாக இல்லாவிட்டாலும் அங்கே அவரது திரைப்படங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகம். காரணம் அவரது நடிப்புத் திறன், வித்யாபாலன் திரைப்படம் என்றால் அதில் நிச்சயம் புதுமையாகவும், ரசனையாகவும் ஏதாவது இருக்கும் என்று கூறி பாலிவுட் பிரபலங்களே கூட வித்யாவின் திரைப்படங்களை எதிர்பார்த்திருப்பார்கள்.

அப்படிப் பட்டவரைக் கொண்டு வந்து இப்படி ஒரு டம்மி ரோலில் நடிக்க வைத்தது வீண் என்று நெட்டிஸன்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர். ஆனால்... வித்யா பாலன் தனது ரசிகர்களின் இந்தக் குற்றச்சாட்டை ஏற்கவில்லை. அவரென்ன சொல்கிறார் என்றால், என் டி ஆர் கதாநாயகுடு திரைப்படம் முதல்பாகம் தான் வெளிவந்திருக்கிறது. அதில் எனது பங்கு குறைவு. குறைவான காட்சிகளில் மட்டுமே நான் நடித்திருக்கிறேன். ஆனால் அதன் இரண்டாம் பாகத்தில் கதையே என்னைச் சுற்றித்தான் நகரும் என்பதால் எனது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்த அதிகம் வாய்ப்பு உண்டு. எனவே என் டி ஆர் மகாநாயகுடு என்ற பெயரில் ஃபிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகியிருக்கிறது. பார்ட் 2 திரைப்படத்தைப் பார்த்து விட்டு பிறகு என் நடிப்பை விமர்சியுங்கள்’ என்கிறார். வித்யா சொன்னா சரி தான்.

Tags : வித்யா பாலன் NTR பாலகிருஷ்ணா என் டி ஆர் கதாநாயகுடு என் டி ஆர் மகாநாயகுடு பசவதாரகம் NTR KADHANAYAKUDU VIDYA BALAN NANDHAMURI BALAKRISHNA

More from the section

விஜய் - அட்லி படத்தில் இணைந்துள்ள பிரபல பாலிவுட் நடிகர்!
விஜய் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள வாட்ச்மேன் பட டிரெய்லர்!
‘பிஎம் நரேந்திர மோடி’ படம்: டிரெய்லர் வெளியீடு!
விக்னேஷ் சிவன் இயக்கும் சிவகார்த்திகேயன் படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
வெளியானது நயன்தாராவின் 'ஐரா' ட்ரைலர்