திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

கோடி ரூபாய் மதிப்புள்ள நிஜாம் காலத்து தங்க டிஃபன் பாக்ஸ் திருடு போனது!

By RKV| DIN | Published: 06th September 2018 10:42 AM

 

ஹைதராபாத் நிஜாமின் விலைமதிப்பற்ற கற்கள் பதித்த தங்க டிஃபன் கேரியர் ஞாயிறு அன்று திடீரென திருடு போனது ஹைதராபாத் நிஜாம் மியூசியத்தில் நிஜாம் நினைவாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அந்த தங்க டிஃபன் கேரியரில் மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்ட கப் அண்ட் சாஸர் மற்றும் ஸ்பூனோடு சேர்த்து திருடப்பட்டதாகத் தகவல்.

மியூசிய அதிகாரிகள் திங்களன்று காலையில் வந்து மியூசியத்தைப் பார்வையிட்டபோது நிஜாமின் டிஃபன் கேரியர் திருடு போனதைக் கண்டறிந்து காவல்துறையிடம் புகார் அளித்தனர். திருட்டு நடந்த இடத்தை சோதனையிட்ட காவல்துறையினர் மியூசியத்தின் புகைபோக்கியில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி ஜன்னலை உடைத்துக் கொண்டு திருடர்கள் உள்ளே இறங்கி திருட்டை நிகழ்த்தியிருக்க வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். உடைக்கப் பட்ட கண்ணாடி ஜன்னல் 4 அடி அகலமானது. ஜன்னலை உடைக்கும் முன் திருட்டில் ஈடுபட்டவர்கள் முதல் மாடிக்கு வந்து அங்கிருந்து புகைபோக்கி ஜன்னல் வழியாக இறங்கி இந்த திருட்டை நிகழ்த்தியுள்ளதாகத் தெரிகிறது.

காவல்துறை விசாரணையில் மேலும் தெரிய வந்த செய்தி,  மியூசியத்தில் திருடியவர்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவில் சிக்காமல் மிக சாமர்த்தியமாக வேறொரு டைரக்‌ஷனில் மியூசியத்தில் நுழைய முற்பட்டிருப்பதால் திருடர்கள் உள்ளே வந்து சென்றதற்கான தகுந்த ஆதாரப் பதிவுகளை சிசிடிவி கேமிராவில் இருந்து பெற இயலவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறியதிலிருந்து, நிஜாம் அரண்மனையில் தற்போது போதிய பாதுகாப்பு இல்லை என்பதால் மியூசியத் திருட்டை நிகழ்த்தியது மியூசியத்தின் உள்ளிருக்கும் நபர்களில் ஒருவரே தவிர பிறிதொருவராக இருக்க வாய்ப்பில்லை, திருட்டுக்குக் காரணமானவர்களைப் பிடிக்க 10 தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தனர்.

தற்போது திருட்டைக் கண்டுபிடிக்கும் முனைப்பில் தேவையான சாட்சியங்களையும், ஆதாரங்களையும் பாதுகாக்கும் பொருட்டு மியூசியத்தில் நிஜாமின் டிஃபன் கேரியர் திருடு போன பகுதியில் பார்வையாளர்கள் வருகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

நிஜாமின் தங்க டிஃபன் கேரியர் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள் சில...

Tags : Nizam's gold tiffin box stolen நிஜாமின் தங்க டிஃபன் பாக்ஸ் திருட்டு 1 கோடி ரூபாய் மதிப்பு ஹைதராபாத் நிஜாம் அரண்மனை புரானி ஹவேலி

More from the section

முதல்ல ரசனையா கிஸ் அடிக்கக் கத்துக்கோங்க பாஸ்! (காணொளி)
நெடுவாழிக்கு கல்யாணமாமே!
ஓர் அலுவலகத்தில் மிகவும் கடினமான வேலை எது?
சிறுநீர் தாராளமாக வெளியேற, தலைமுடி கொட்டுதல் குறைய, வாயுக் கோளாறுகள் நீங்க ஒரே தீர்வு!
வாழ்க்கையைக் கொண்டாடுவது எப்படி?