21 ஏப்ரல் 2019

திமிங்கலத்தின் வாய்க்குள் சிக்கி உயிரோடு வெளியில் வந்த மயிர்க்கூச்செரிய வைக்கும் சம்பவம்!

By RKV| DIN | Published: 12th March 2019 04:16 PM

 

பைபிளின் ஜோனா போல திமிங்கலத்தின் வாய்க்குள் போய்விட்டு மீண்டு வந்திருக்கிறார் தெற்கு ஆப்ரிக்காவைச் சேர்ந்த கடல் பாதுகாப்பாளரான சிம்ப்பெஃப். 

51 வயதான ரெய்னர் சிம்பெஃப் கடந்த மாதம் தெற்கு ஆஃப்ரிக்காவில் இருக்கும் துறைமுக நகரமான போர்ட் எலிசபெத் சென்று அங்கு சிறுமீன் வகைகளில் ஒன்றான சார்டைன் மீன்களின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்காக ஸ்னோர்கெல் என்று சொல்லப் படக்கூடிய ஆழ்கடல் மூழ்கு நீச்சலில் ஈடுபட்டிருந்தார். சார்டைன் மீன்களின் நடமாட்டத்தை கடலின் மேற்புறத்தில் ஒரு சிறு படகில் நின்று கொண்டு சின்ப்பெஃபின் மனைவி விடியோ பதிவாக்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென தன்னைச் சுற்றி இருள் சூழ்வதைப் போன்றதான உணர்வு ஏற்பட்டிருக்கிறது சிம்ப்பெஃப்க்கு. அதை என்னவென்று அறிவதற்குள் சின்ப்ஃபெஃப் ஒரு மிகப்பெரிய திமிங்கலத்தின் வாய்க்குள் அகப்பட்டுக் கொண்டிருந்தார். அவர் சுதாரித்துக்கொண்டு நிமிர்வதற்குள் திமிங்கலத்தின் வாயிலிருந்து சிம்ப்பெஃபின் கால்கள் வெளியில் தொங்கிக் கொண்டிருந்திருக்கின்றன. அந்த நீலத் திமிங்கலமானது தன் வழியில் எதிர்ப்படும் அனைத்தையும் பிரம்மாண்டமாகத் திறந்து கொண்டிருந்த தனது வாய் வழியாக கவளம், கவளமாக விழுங்கிய வண்ணம் வந்து கொண்டிருந்திருக்கிறது. நீரின் போக்கிலான அந்தக் கவளங்களோடு சேர்த்து சிம்பெஃபும் திமிங்கலத்தின் வாய்க்குள் நீரோட்டத்தின் விசையுடன் திணிக்கப்பட்டிருக்கிறார். இது நடந்தது ஃபிப்ரவரி மாத இறுதியில்.

சிம்பெஃப்பின் மனைவி சில்க்கி நடந்த விபரீதங்கள் அனைத்தையும் ஒரு படகின் மீது நின்றவாறு செய்வதறியாது திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தார்.

என் இடுப்பைச் சுற்றி ஏதோ அழுத்தத்தை உணர்ந்த நான் உடனடியாக நிகழ்ந்தது என்னவென உணர்ந்தேன். ஆமாம்... நீலத்திமிங்கலத்தின் முதன்மை உணவுடன் சேர்த்து நீரோட்டத்தில் அடித்துக் கொண்டு நானும் அதன் வாய்க்குள் அகப்பட்டிருப்பதை உணர்ந்தேன் என்கிறார் சிம்ப்பெஃப்.

பிறகு எப்படியோ ஒருவழியாக திமிங்கலம் தனது தவறை உணர்ந்து!!! வாயைத் திறக்கையில் சிம்பெஃப் மீண்டும் திமிங்கலத்தின் வாயிலிருந்து நழுவி கடல்பரப்பில் விழுந்த போது சில நிமிடங்கள் கரைந்திருந்தன. நல்லவேளை பைபிளில் ஜோனா மூன்று முழு இரவுகளை திமிங்கலத்தின் வாயில் கடத்த வேண்டியதாக இருந்தது. ஆனால் எனக்கு அப்படி அல்ல. சில நிமிடங்கள் மட்டுமே திமிங்கலத்தின் வாயில் அடைபட்ட போதே எனக்கு மயிர்கூச்செரிந்தது. உடனே வெளியில் வந்து விட்டாலும் அந்த நிமிடத்து சில்லிட வைக்கும் உணர்வை என்னால் இப்போதும் மறக்க முடியாது என்கிறார் சிம்பெஃப்.

Tags : மரண விளையாட்டு death play birth and death Bible’s Jonah South African marine conservationist Rainer Schimpf தெற்கு ஆப்ரிக்கா கடல் பாதுகாப்பாளர் சிம்ப்பெஃப் நீலத்திமிங்கலம் உயிர் மீளல்

More from the section

சின்ன சின்ன தவறுகளால்தான் பெரிய பெரிய அனுபவங்கள் வரும்!
‘பிரியங்கா’ ஏன் ‘இந்திரா’ ஆக வேண்டும்?!
இந்தக் கட்டுரை இளைஞர்களுக்கு மட்டுமே!
யாரை  பார்த்தாலும் சந்தோஷமா  தெரிகிறதா? இதான் காரணம்!
பிணத்தைச் சுற்றி அமர்ந்து அழுத பெண்ணுக்கு குரங்கு கூறிய ஆறுதல்! (வைரல் விடியோ)