புதன்கிழமை 17 ஜூலை 2019

ஸ்மார்ட் வாட்ச்சிலேயே பணம் செலுத்தும் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ள ஃபிட்பிட் வெர்சா!

By எலெக்ட்ரா| Published: 08th July 2019 11:31 AM

 

ஃபிட்பிட் நிறுவனம் தனது ஸ்மார்ட் வாட்ச் வரிசையில் வெர்சா என்ற இரண்டாவது மாடலை வெளியிட்டுள்ளது. வாட்ச்சிலேயே பணம் செலுத்தும் வசதி கொண்டதாக இந்த வெர்சா மாடல் உருவாக்கப்பட்டுள்ளது, சமீபத்தில் ஃபிட்பிட் நிறுவனம் வாங்கிய பெப்பல் மற்றும் காயின் ஆகிய நிறுவனங்கள் இதன் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றியுள்ளன.

முந்தைய மாடலான ஐயோனிக்கோடு ஒப்பிடுகையில், இரண்டே மாற்றங்கள் தான் வெர்சாவில் உள்ளது. அதாவது வெர்சாவில் ஜி.பி.எஸ் வசதி மற்றும் எ.எஃப்.சி சிப் வசதி இல்லை. ஆனால், இந்தியாவில் வெளியாக இருக்கும் வெர்சா மாடலில், 'ஃபிட்பிட் பே' மூலம் பணம் செலுத்த முடியும். ஆனால், தற்சமயம் இன்னும் எந்த வங்கியுடனும், ஒப்பந்தம் செய்யப்படாததால், இப்போது பணம் செலுத்த முடியாது.

மற்றபடி ஐயோனிக் மாடலை ஒட்டியே இருக்கும் இந்த வெர்சாவில் 50 மீட்டர் ஆழம் வரை வாட்டர் ப்ரூஃப் வசதி உண்டு. கலர் ஸ்கிரீன் மற்றும் இதயத் துடிப்பை பதிவு செய்துக் கொண்டே இருக்கும், இந்த ஸ்மார்ட் வாட்ச்சின் பேட்டரி 4 முதல் ஒரு வாரம் வரை தாங்கும்.

விலையை பொருத்தவரையில் பெரிய வித்தியாசம் இல்லை. 20,000 ரூபாய்க்கு வெர்சா விற்பனைக்கு வருகிறது. ஆனால், முந்தைய மாடலான ஐயோனிக் 25,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தனது போட்டியாளர்களான ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 1 மற்றும் சாம்சங் கீர் ஸ்போர்ட் ஆகிய ஸ்மார்ட்வாட்ச்கள் காட்டிலும், வெர்சாவின் விலை குறைவே.

பல உடல் பயிற்சிகளை டிராக் செய்வதில் பிளஸ் மார்க் வாங்கினாலும், அந்த டேட்டாக்களில் உள்ள தவறுகள் அதிகமாக இருப்பது ஒரு மைனஸ். மொத்தத்தில், இந்த ரேஞ்சில் இருக்கும் மற்ற ஸ்மார்ட்வாட்ச்களோடு ஒப்பிடும்போது, 20,000 ரூபாய்க்கு கிடைக்கும் வெர்சா ஒரு நல்ல சாய்ஸ்.

பிளஸ் மைனஸ் ரேட்டிங்
பேட்டரி தவறான டிராக்கிங் டேட்டா டிசைன் - 4.5
குறைந்த எடை இன் - பில்ட் ஜி.பி.எசஸ் இல்லை டிராக்கிங் - 2.5
வாட்ச் ஸ்ட்ராப்ஸ் வாய்ஸ் அசிஸ்டென்ட் இல்லை மற்ற அம்சங்கள் - 4
வாட்டர் ப்ரூஃப்   பணத்து ஏற்ற மதிப்பு - 3
நல்ல வடிவமைப்பைக் கொண்ட ஓ.எஸ்   மொத்தம் - 3.5

 

 

 

 

 
 

Tags : லைஃப்ஸ்டைல் தொழில்நுட்பம் fitbit smart watch ஃபிட்பிட் ஸ்மார்ட் வாட்ச் life style technology

More from the section

அறிவை தேடுவதற்கு பெருந்தடையாக இருப்பது இதுதான்!
நீங்க குரல் கொடுத்தா போதும், இந்த மெஷின் தானே காஃபி போட்டுத் தருமாம்!
சகலகலா ரோபோ இது! பெருமைப்படுகிறார் இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர்!
வாட்ஸ் அப் ‘பக்’ (விஷப் பூச்சி) உங்களை கடிக்காம பார்த்துக்குங்க!
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பிளஸ், மைனஸ் என்ன? அவை வொர்த்தா இல்லையா?