புதன்கிழமை 16 ஜனவரி 2019

கடுமையான வாயுத் தொல்லையால் அவதிப்படுபவர்கள் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

By கஸ்தூரி ராஜேந்திரன், தேனி.| Published: 24th August 2018 03:30 PM

 

மொச்சை, கடலை, பட்டாணி, கடலைப் பருப்பு, பாசிப் பயறு, பீன்ஸ், சோயாபீன்ஸ், முட்டைக்கோஸ், வெங்காயம், காலிஃபிளவர், முந்திரிப்பருப்பு போன்ற கொட்டை வகைகள், வாழைக்காய், உருளைக் கிழங்கு, சேனைக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சாக்லேட், கேக், பிஸ்கட், பிரெட், பாப்கார்ன், செயற்கைப் பழச்சாறுகள், மென்பானங்கள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட மசாலா மிகுந்த உணவுகள், இறைச்சி, முட்டை, பால், பாலில் தயாரிக்கப்பட்ட பால் அல்வா, பால்கோவா, சீஸ் போன்ற உணவு வகைகள், அப்பளம், வடகம், வினிகர், பீர் ஆகியவற்றுடன் எந்த உணவைச் சாப்பிட்டால் உங்களுக்கு வாயு அதிகரிப்பதாகத் தோன்றுகிறதோ, அதையும் முடிந்தவரை குறைத்துக் கொள்ள வேண்டும்.

முதல்நாள் முழுதும் ஏதோ ஒரு காரணத்திற்காக போதுமான அளவில் மூன்று வேளைகளிலும் உணவு எடுத்துக்கொள்ள மறந்து மறுநாள் பசி மற்றும் சுவையின் காரணமாக மூன்று வேளையும் அதிகமாக உண்டாலும் வாயுத்தொல்லையால் அவதியுற நேரிடும். காலியான வயிற்றில் சேர்ந்த வாயு பிரிவதற்கு வழியற்றுப் போனால் உள்ளுறுப்புகளுக்குள் வாயு நகர்வதை நம்மால் உணர முடியும். அந்த வாயு வெளியேறும் வரை தொல்லை தான்.

உணவுப் பழக்கத்தால் வரும் வாயுத்தொல்லை சீராக...

வாயு மிகுந்தவை எனப் பட்டியலிடப்பட்டுள்ள மேற்கண்ட உணவுப் பொருட்களை உண்ணும் நாட்களில் உண்டு முடித்ததும் ஒரு கப் சூடான வெந்நீர் அருந்தலாம். (னாக்குப் பொறுக்குமளவு சூடு போதும்) பிறகு உண்ட உணவு செரிக்கும் அளவுக்கு சாப்பிட்டு முடித்த இரண்டு மணி நேரங்களுக்குப் பிறகு எளிதான உடற்பயிற்சிகளோ அல்லது நடைப்பயிற்சியோ மேற்கொண்டு உணட உணவை செரிக்க வேண்டும். உணவினால் உடலில் சேரும் கலோரிகள் முழுதும் எரிக்கப்பட்டு உடலில் சேருமாயின் பிறகு வாயுத்தொல்லை குறித்த கவலை தேவையில்லை.
 

Tags : இனிய இல்லம் வாயுத்தொல்லை gas trouble foods to avoid தவிர்க்க வேண்டிய உணவுகள்

More from the section

இப்படியா பிள்ளையை வளர்க்கிறது? இந்த கேள்வியை எதிர்கொள்ளாத பெற்றோர் இருக்க முடியுமா?
பல்லாவரம் காந்தி மீன் மார்க்கெட்... வகை வகையான மீன்களை விளக்கும் யூ டியூப் காணொளி!
ஆட்டோமேடிக் போண்டா மேக்கர்...
வெங்காயத் தைலம்... தலைமுடி உதிரும் பிரச்னை தீர எளிய உபாயம்!
கோவையில் மத்தியதர வர்க்க இல்லத்தரசிகளை குஷிப்படுத்தி வரும் ரூ 2,500 மலிவு விலை வாஷிங் மெஷின்!