திங்கள்கிழமை 25 மார்ச் 2019

ஆட்டோமேடிக் போண்டா மேக்கர்...

By கஸ்தூரி ராஜேந்திரன், தேனி.| DIN | Published: 18th September 2018 12:42 PM

 

யூ டியூபில் இளைஞர் ஒருவர் ஆட்டோமேடிக் பஜ்ஜி மெஷின் என்ற பெயரில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார். ஆனால் பார்ப்பதற்கு அது போண்டா மேக்கர் போலத்தான் இருக்கிறது. அந்த மெஷினில் மேலும் சில வசதிகளைச் செய்தால் மட்டுமே அதை ஆட்டோமேடிக் என்று சொல்ல முடியும். ஆனாலும் ஐடியா சிறப்பானதாகவே தோன்றியதால் தினமணி லைஃப்ஸ்டைல் வாசகர்களும் அறிந்து கொள்ளட்டும் என்று இங்கே பகிர்கிறோம்.

இப்போதைக்கு இதை செமி ஆட்டோமேடிக் போண்டா மேக்கர் என்று வைத்துக் கொள்ளுங்கள். விழாக்காலங்களில் அதிகளவில் பலகாரங்கள் செய்து குவிக்கும் இல்லத்தரசிகளுக்குக் கூட இந்த மெஷின் மிக்க உபயோகமுள்ளதாக இருக்கக் கூடும். அது மட்டுமல்ல சிறு, குறு ஹோட்டல் மற்றும் பலகாரக் கடைகளில் இந்த மெஷினை வைத்துக் கொண்டு போண்டா இட்டால் சாப்பிட விரும்புபவர்களோடு இதை வேடிக்கை பார்க்கவும் கூட்டம் நன்றாகக் கூடக்கூடும். பண்டம் சுவையானதாக இருந்தால் அவர்களில் பலர் ரெகுலராக சாப்பிடவும் செய்வார்கள். முக்கியமாக வேலைப்பளு குறையும். எளிதில் வேலையும் முடியும்.

ஆட்டோமேடிக் போண்டா மேக்கருக்கான விடியோ லிங்க்... 

 

தொலைக்காட்சிகளில் தற்போது ஏரளமான சமையல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. ஒவ்வொரு சேனலிலும் செஃப் தாமு, செஃப் வெங்கடேஷ் பட், சமையல் கலைஞர்கள் ரேவதி சண்முகம், நளபாக மகாராணி மல்லிகா பத்ரிநாத் உள்ளிட்ட பலர் ஏதாவது ஒரு சேனலில் ஏதாவது ஒரு பலகாரத்தை விதம் விதமாகச் சமைத்துக் காட்டிக் கொண்டே இருக்கிறார்கள். அடிப்படையில் மனிதர்கள் ருசிக்கு தம்மை ஒப்புக் கொடுத்தவர்கள். எனவே அவர்களுக்கு எத்தனை விதமான பலகாரங்கள் இருந்தாலும் மேலும் மேலும் அதன் மீதான ஆர்வம் தணிவதே இல்லை. அதை எளிமையாகச் செய்யும் உபாயங்களையும் அவர்கள் தேடிக் கொண்டே தான் இருக்கிறார்கள். தற்போது மார்க்கெட்டில் முறுக்குப் பிழிவதற்கான மெஷின் வந்து விட்டது. மெதுவடை போடக்கூட மெஷின் வந்து விட்டது. அப்படி இருக்கையில் ஆட்டோமேடிக் போண்டா மேக்கர் தானா அதிசயம்?! அதுவும் வந்து விட்டது. இதில் பஜ்ஜி இட வேண்டும் என்றால் வாழைக்காய் அல்லது உருளைக் கிழங்கு அல்லது வெங்காயமாவது சேர்க்கப் பட வேண்டும். அதற்கான ஆப்ஷன்களையும் அதில் சேர்க்க வேண்டும். அப்படிச் சேர்த்தால் மட்டுமே அது ஆட்டோமேடிக் என்ற பதத்திற்கு பொருத்தமானது. கூடிய விரைவில் அப்படியொரு கண்டுபிடிப்பும் வரலாம். வந்தால் யார் மகிழ்கிறார்களோ இல்லையோ பெண்கள் நிச்சயம் மகிழ்வார்கள்.

Tags : AUTOMATIC BONDA MAKER SEMI AUTOMATIC BONDA MAKER CHEFS HOUSE WIVES EASY SNACKS MAKER ஆட்டோமேடிக் போண்டா மேக்கர் செஃப் இல்லத்தரசிகள் பலகாரக் கடைகள்

More from the section

சிவராத்திரி ஸ்பெஷல் இனிப்பு ‘தம்பிட்டு’ ரெசிப்பி!
டூத்பேஸ்ட் மேஜிக்... பல் துலக்க மட்டுமல்ல, இப்படியும் பயன்படுத்தலாம்!
இப்படியா பிள்ளையை வளர்க்கிறது? இந்த கேள்வியை எதிர்கொள்ளாத பெற்றோர் இருக்க முடியுமா?
பல்லாவரம் காந்தி மீன் மார்க்கெட்... வகை வகையான மீன்களை விளக்கும் யூ டியூப் காணொளி!
வெங்காயத் தைலம்... தலைமுடி உதிரும் பிரச்னை தீர எளிய உபாயம்!