திங்கள்கிழமை 18 பிப்ரவரி 2019

இந்த வார பலன்கள்: எந்த ராசிக்காரர்களுக்கு யோகத்தைத் தரப்போகிறது?

DIN | Published: 07th September 2018 12:00 AM

 

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (செப்டம்பர் 7 - செப்டம்பர் 13) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

மனதிலும் உடலிலும் புதிய தெளிவு தென்படும். அனைத்துச் செயல்களிலும் உங்களின் தனி முத்திரையை பதிப்பீர்கள். வீட்டுக்குத் தேவையான உபகரணங்களை வாங்குவீர்கள். நண்பர்களுக்காக ஜாமீன் போடுவதையோ, வாக்குக் கொடுப்பதையோ தவிர்க்கவும். 

உத்தியோகஸ்தர்களுக்கு இது சிறப்பான காலகட்டமாகும். சிறிய அளவு முயற்சிகளிலேயே நல்ல பலனை அடைவீர்கள். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் நல்லெண்ணங்களுக்கு பாத்திரமாக பொருள்களின் தரத்தைக் கூட்டவும். விவசாயிகள் செலவு குறைந்த மாற்றுப் பயிர்களை உற்பத்தி செய்து பலன் பெறவும். 

அரசியல்வாதிகளுக்கு வெற்றியும் தோல்வியும் மாறிமாறி வரும். எவரிடமும் வெளிப்படையாகப் பேச வேண்டாம். கலைத்துறையினர் நிதானமும் கவனமுமாக நடந்துக் கொண்டால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பார்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மாணவமணிகள் ஆழ்ந்து படிக்கவும். நல்ல மதிப்பெண்கள் பெற யோகா, பிராணாயாமம் செய்யவும்.

பரிகாரம்: விநாயகருக்கும் நந்தீஸ்வரருக்கும் அருகம்புல் மாலை சாற்றி வணங்கவும். 

அனுகூலமான தினங்கள்: 7, 8. 

சந்திராஷ்டமம்: இல்லை. 

{pagination-pagination}
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் நிலவும். உங்கள் திறமைகள் பளிச்சிடும். பொருளாதாரம் சீராக இருக்கும். அவ்வப்போது சிறு பயணங்களால் விரயங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தற்போது எவருக்கும் கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும். 

உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். மேலதிகாரிகள் சில சலுகைகளை வழங்குவார்கள். வியாபாரிகளுக்கு  கொடுக்கல் வாங்கல்களில் இருந்த சிரமங்கள் குறையும். புதிய முயற்சிகளை தீர ஆலோசித்து எடுக்கவும். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருப்பினும் லாபம் குறைவாக இருக்கும். கால்நடைகளை வாங்கி பலன் பெறலாம். 

அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்லவும். தொண்டர்களின் நலனில் கூடுதல் அக்கறை செலுத்தவும். கலைத்துறையினரின் புதிய முயற்சிகள் வெற்றி பெறும். ரசிகர்களின் ஆதரவுடன் பயணங்களை மேற்கொள்வீர்கள். பெண்மணிகள் குடும்பத்தில் அமைதியைக் காண்பீர்கள். மாணவமணிகளின் கோரிக்கைகள் நிறைவேறும். விளையாட்டிலும் படிப்பிலும் கவனம் செலுத்தவும்.

பரிகாரம்: வளசரவாக்கம் வேங்கட சுப்ரமண்யரை வணங்கி நலம் பெறவும். 

அனுகூலமான தினங்கள்: 7, 9. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

உங்கள் பேச்சு மற்றும் செயல்களில் ஒரு மிடுக்கு தெரியும். செயல்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பயணங்கள் பலன் தரும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். பூர்வீக வழியில் இருந்த தடைகள் விலகி நன்மைகள் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு  வேலைப்பளு குறைந்து காணப்படும். மேலதிகாரிகள் பரிவுடன் நடந்து கொள்வார்கள். வியாபாரிகள் குறைந்த முதலீடு செய்து வியாபாரத்தைப் பெருக்க முனைவர். புதியவர்களை நம்பி கடன் கொடுக்க வேண்டாம். விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். மாற்றுப் பயிர்களை உற்பத்தி செய்வதன் மூலம் மேலும் லாபத்தை அள்ளலாம். 

அரசியல்வாதிகள் எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். கட்சித் தலைமையிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளவும்.  கலைத்துறையினரின் ஆற்றல் அதிகரிக்கும்.  புதிய வாய்ப்புகள் வந்து சேரும். பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையையும் அமைதியையும் காண்பார்கள். மாணவமணிகள் கல்வியில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிக்கொடி நாட்டுவீர்கள்.

பரிகாரம்: பைரவரை வழிபட்டுவர, நலன்கள் சிறக்கும். 

அனுகூலமான தினங்கள்: 8, 9. 

சந்திராஷ்டமம்: இல்லை. 

{pagination-pagination}
கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். உடன்பிறந்தோர் வழியில் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். திட்டமிட்ட செயல்கள் அனைத்தும் வெற்றி பெறும்.  

உத்தியோகஸ்தர்கள் சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். பதவி உயர்வுக்கான அறிகுறிகள் தென்படும். வியாபாரிகளுக்கு சற்று மந்தமான நிலை நிலவும். வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொள்வது நல்லது. விவசாயிகளுக்கு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. 

அரசியல்வாதிகளுக்கு திட்டமிட்ட செயல்கள் முடிந்து கட்சியில் புதிய பொறுப்புகளைப் பெற்று மகிழ்வீர்கள். தொண்டர்களின் ஒத்துழைப்பு அமோகமாக இருக்கும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்கள் செய்வர். வேலைகளைச் சுலபமாக முடித்து பாராட்டுகள் பெறுவர். பெண்மணிகள் குடும்பத்தில் அமைதியைக் காண்பீர்கள். கணவரிடம் ஒற்றுமையோடு இருப்பர். மாணவமணிகள் கல்வியில் அக்கறை காட்டுவார்கள்.

பரிகாரம்: சூரியபகவானை வழிபட்டுவர, நலன்கள் சிறக்கும். 

அனுகூலமான தினங்கள்: 8, 9. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும். நீண்ட காலக்கனவுகளை எப்பாடுபட்டாவது நிறைவேற்றிக் கொள்வீர்கள். உங்களுக்குத் தொல்லைகள் கொடுத்தவர்கள் அடங்கிப் போவார்கள். உழைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருமானத்தைப் பெருக்கவும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கெடுபிடிக்கு ஆளாக நேரிடலாம்.  சக ஊழியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சாதகமாகவே அமையும். கூட்டாளிகளுடன் சேர்ந்து செய்யும் கூட்டு முயற்சிகள் வெற்றியைத் தரும். விவசாயிகள் பிற்காலத் திட்டங்களுக்காகச் செலவு செய்ய நேரிடும்.  

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தை அனுசரித்துச் செல்லவும். பிறரிடம் வெளிப்படையாகப் பேசுவதைத் தவிர்க்கவும். கலைத்துறையினர் புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். பெண்மணிகள் கணவரிடம் எதிர்பார்த்த அன்பையும் ஆதரவையும் பெறுவார்கள். உறவினர், உடன்பிறந்தோரிடம் மனம் திறந்து பேச வேண்டாம். மாணவ மணிகளுக்கு இது குதூகலமான காலகட்டமாகும். 

பரிகாரம்: திங்களன்று அம்பாள் தரிசனம் உகந்தது. 

அனுகூலமான தினங்கள்: 8,10. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் சிறு குழப்பங்கள் ஏற்பட்டாலும் அவற்றை சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். திருமணம் போன்ற சுப காரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். குடும்பத்தினரிடம் பாசத்தோடு பழகுவீர்கள். சிலருக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளுடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். இதனால் அலுவலக வேலைகளில் சந்தோஷத்துடன் ஈடுபடுவீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் லாபம் அதிகரிக்கும். கடன் தொல்லை நீங்கும். விவசாயிகளுக்கு கொள்முதலில் லாபம் கிடைக்கும். கால்நடைகளை வைத்திருப்போர் எதிர்பார்த்த வருமானத்தைப் பெறுவர். 

அரசியல்வாதிகள் திட்டமிட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிப்பார்கள். உட்கட்சிப் பூசல்களில் மாட்டிக் கொள்ளாமல் தப்பித்துக் கொள்வார்கள். கலைத்துறையினர் பாராட்டு மழையில் நனைவீர்கள். பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவமணிகள் விடா முயற்சியால் வெற்றியடைவார்கள். பெற்றோரிடமும் ஆசிரியரிடமும் அனுசரித்துச் செல்லவும். 

பரிகாரம்: சனிக்கிழமையன்று சனிபகவானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 9, 10. 

சந்திராஷ்டமம்: இல்லை. 

{pagination-pagination}
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை காணப்படும். உடன்பிறந்தோர் மூலம் சிறு தொல்லைகள் ஏற்பட்டு மறையும். செலவுகளும் சற்று கூடும். பேச்சில் கண்ணியம் தென்படும். உங்கள் பொறுமையை சோதிக்கும் வகையில் சில விஷயங்கள் நடக்கும். 

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளால் சிறு சிரமங்கள் ஏற்படும். சக ஊழியர்களின் ஆதரவினால் அனைத்தையும் சமாளிப்பீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் நன்றாக இருக்கும். விவசாயிகள் செலவு குறைந்த மாற்றுப்பயிர்களைப் பயிர் செய்து பலன் பெறலாம். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களிடம் கனிவுடன் நடந்து நல்லெண்ணத்தைப் பெறுவீர்கள். 

அரசியல்வாதிகள் தங்களின் செயல்களை வெற்றியுடன் செய்து முடிப்பர். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் சுமாராக இருக்கும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் அன்பும் பாசமும் அதிகரிக்கும். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். மாணவமணிகள் பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படித்து மனப்பாடம் செய்யவும்.

பரிகாரம்: வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 10, 11.

சந்திராஷ்டமம்: இல்லை. 

{pagination-pagination}


விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் குதூகலம் நிலவும். ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வார்கள். எதிர்பாராத செலவுகளும் உண்டாகும். வாண்டி வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. தந்தையின் உடல்நலத்தில் சிறு குறைபாடுகள் உண்டாகும். 

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவார்கள். பதவி உயர்வு, ஊதிய உயர்வு பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அலுவலகப் பயணங்களை ஒத்திவைக்கவும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சுமாராக இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தள்ளி வைக்கவும். விவசாயிகள் இந்த காலகட்டத்தில் நன்கு உழைத்து பொருளீட்டுவார்கள். அரசியல்வாதிகளுக்கு சாதகமாக இருந்தவர்கள் எதிரிகளாக மாறும் நேரம். மேலிடத்தின் பார்வையிலிருந்தும் தள்ளி இருங்கள்.

கலைத்துறையினரின் திறமைகள் பளிச்சிடும். சக கலைஞர்கள் நட்பு பாராட்டுவார்கள். பெண்மணிகள் குடும்பத்தில் அமைதியைக் காண்பீர்கள். மாணவ மணிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். படிப்பில் அதிக கவனம் செலுத்தவேண்டிய நேரமிது.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் வேங்கடேசப் பெருமாளை தரிசித்து நலம் பெறவும். 

அனுகூலமான தினங்கள்: 9, 11.

சந்திராஷ்டமம்: இல்லை. 

{pagination-pagination}
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

உங்கள் ஆற்றலை வெளிப்படுத்தும் சூழ்நிலை உருவாகும். பொருளாதாரத்தில் ஸ்திரத் தன்மையைக் காண்பீர்கள். தைரியத்துடன் சாகஸமான காரியங்களைச் செய்வீர்கள். உடல்நலம் சிறிது பாதிக்கப்படலாம். சிலர் எதிர்பாராத பயணங்களைச் செய்வார்கள்.  

உத்தியோகஸ்தர்கள் இடைவிடாமல் உழைக்க வேண்டி வரும். கோரிக்கைகள் நிறைவேறத் தாமதமாகும். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களிடம் கவனமாக இருக்கவும். வியாபாரிகள் நல்ல லாபத்தைக் காணும் யோகமான வாரம் இது. தடைகளைச் சமாளிக்கும் தைரியத்தைப் பெறுவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் குறையும். கடன் வாங்குவதையும் தவிர்க்கவும். 

அரசியல்வாதிகள் முரட்டுப் பிடிவாதத்தைவிட்டொழிக்கவும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் செய்வதும் பணவரவும் தாமதமாகும். ரசிகர்களும் சற்று அலட்சியம் காட்டுவார்கள். பெண்மணிகளுக்கு கணவரிடம் நிலவிவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பணவரவும் சீராகும். மாணவமணிகள் உடல்நலத்தில் அக்கறை செலுத்தவும். கடுமையான பயிற்சிகளில் ஈடுபட வேண்டாம்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானைத் தரிசித்து வரவும்.

அனுகூலமான தினங்கள்: 8, 12. 

சந்திராஷ்டமம்: 7.

{pagination-pagination}
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

உங்கள் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் தென்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திட்டமிட்ட செயல்கள் அனைத்தும் வெற்றி பெறும். யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம்.

உத்தியோகஸ்தர்கள் குறித்த நேரத்திற்கு முன்பே வேலைகளைச் செய்து முடிப்பார்கள். பதவி உயர்வுக்கான அறிகுறிகள் தென்படும். வியாபாரிகளுக்கு இந்த காலகட்டத்தில் லாபம் சற்று குறைவாகவே இருக்கும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். விவசாயிகள் கொள்முதலில் லாபம் காண்பர். ஆகவே புதிய குத்தகைகளை நாடிச் செல்லலாம். கால்நடைகளின் மூலமும் பலனை அடைவார்கள்.

அரசியல்வாதிகள் எடுத்த காரியங்கள் அனைத்தையும் வெற்றிகரமாக முடிப்பார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவினால்  புதிய பொறுப்புகளைப் பெறுவார்கள். கலைத்துறையினர் கடின முயற்சிக்குப்பின் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். பெண்மணிகள் பெரியோர்களின் ஆசியுடன் தமது திட்டங்களை வெற்றிகரமாக முடிப்பார்கள்.  மாணவமணிகளுக்கு முயற்சிக்குத் தகுந்த பலன்கள் கிடைக்கும்.  

பரிகாரம்: இம்மையில் நன்மை செய்யும் பரமேஸ்வரரை வணங்கி வரவும். 

அனுகூலமான தினங்கள்: 10, 13.

சந்திராஷ்டமம்: 8, 9.

{pagination-pagination}

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

வேலைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் தென்படும். மனதிற்கு நிம்மதி தரும் செய்திகளைக் கேட்பீர்கள். சில நேரங்களில் எதையோ இழந்து விட்டது போன்ற மனக்கவலைக்கு ஆளாவீர்கள். சிறு பண விரயமும் உண்டாகும். கௌரவக் குறைச்சலான சூழ்நிலையை தவிர்த்திடுங்கள். 

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிட்டும். வியாபாரிகளுக்கு கொள்முதல் நல்லபடியாக முடியும். புதிய வாடிக்கையாளர்கள்  தேடி வருவார்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகமாக இருக்கும். வயல்வரப்பு சண்டைகளில் ஈடுபட வேண்டாம். 

அரசியல்வாதிகள் அந்தஸ்தான பதவிகளைப் பெறுவார்கள். கடன் வாங்கி தேர்தல் வேலைகளைச் செய்ய வேண்டாம். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் பொருளாதாரத்தில் தொய்வுகள் இருக்காது. பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை நன்றாகவே இருக்கும். மாணவமணிகள் படிப்பில் கவனத்துடன் ஈடுபடவும்.

பரிகாரம்: அம்மனை வழிபட்டு நலம் பெறவும். 

அனுகூலமான தினங்கள்: 9, 13. 

சந்திராஷ்டமம்: 10, 11, 12. 

{pagination-pagination}

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

திட்டமிட்ட வேலைகளில் தாமதம் ஏற்பட்டாலும் முடிவு நீங்கள் எதிர்பார்த்தபடியே அமையும். எல்லா செயல்களையும் உங்களுக்கும் உங்களைச் சார்ந்தவர்களுக்கும் சாதகமாக ஆக்கிக்கொள்வீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வழக்கு விஷயங்கள் சாதகமாக அமையும். 

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை குறையும். திட்டமிட்ட பணிகளில் முன்கூட்டியே செயல்பட்டால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். வியாபாரிகளுக்கு பணவரவு சீராக இருக்கும். தேவைக்கேற்ற சரக்குகளை வாங்கி வியாபாரம் செய்வீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் மனக்கசப்பு உண்டாக வாய்ப்பு இருப்பதால் கவனம் தேவை. 

அரசியல்வாதிகள் அனுகூலமான திருப்பங்களைக் காணமுடியாது. உற்சாகமின்மை, மேலிட அவமதிப்பு போன்றவற்றை சந்திக்க நேரிடலாம். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சக கலைஞர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பெண்மணிகள் குடும்பத்தினருடன் ஒற்றுமையோடு நடந்துக்கொள்ளவும். மாணவமணிகள் விளையாட்டில் ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்ளவும். 

பரிகாரம்: பிரதோஷத்தன்று நந்தீஸ்வரரை நெய்தீபமேற்றி வணங்கவும்.

அனுகூலமான தினங்கள்: 11, 12. 

சந்திராஷ்டமம்: 13.


 

Tags : weekly prediction வார பலன்கள் பரிகாரம் சந்திராஷ்டமம்

More from the section

திருப்பதி: கோவிந்தராஜ சுவாமி தெப்பத்தில் வலம்
காளஹஸ்தி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் பிப்.27-இல் தொடக்கம்
தோகூரில் அருள்புரியும் மாவிலங்கேஸ்வரர்! 
ஸ்ரீ படேசாகிப் சுவாமிகள் மகா குருபூஜை
ஸ்ரீராகவேந்த்ர க்ரந்தாலயாவில் இரண்டாம் ஆண்டு பிரதிஷ்டை விழா