17 பிப்ரவரி 2019

வெள்ளெருக்கு விநாயகரை வழிப்பட்டால் இவ்வளவு நன்மைகளா?

DIN | Published: 10th September 2018 03:05 PM


வெள்ளெருக்குச் செடிக்கு தனி சக்தி உண்டு. வெள்ளெருக்கை தேவ மூலிகை என்று அழைக்கப்படுகிறது. அரிதான பொருள் இருக்கும் இடத்தில்தான் வெள்ளெருக்கு செடி முளைக்கும் என சங்ககால நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிள்ளையார் எத்தனை விதமாக இருந்தாலும் வெள்ளெருக்கு (வெள்ளை எருக்கு) வேரில் உருவான விநாயகருக்கே சக்தி அதிகம்.

சூரியனுக்கு உரிய மூலிகையாகக் கருதப்படும் வெள்ளெருக்கு, சூரிய ஒளியிலுள்ள தண்ணீரை நுட்பமாகக் கிரகித்து வளரும் தன்மை பெற்றது. மகாபாரத காவியத்தில் வரும் பிதாமகர் பீஷ்மரின், துன்பம் நீங்க வழிகாட்டிய பெருமை இதற்கு உண்டு. 12 ஆண்டுகள் மழை பெய்யாமல் இருந்தாலும் கூட, சூரிய கதிர்களில் இருக்கும் தண்ணீரை கிரகித்து வளர்வதோடு தக்க சமயத்தில் பூக்கள் பூத்து, காயும் காய்க்கும் அதிசய தன்மை கொண்டது. 

புதையல், ரத்தினங்கள், சிலைகள் பதுக்கி வைத்திருக்கும் இடங்களில் மட்டுமே வெள்ளெருக்கு முளைக்கும் என விருட்ச நூல்களில் கூறப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தோமேயானால் வெள்ளெருக்கு இருக்கும் இடத்தில் தெய்வீக சக்தி இருக்கிறது என்று அர்த்தம்.

ஆனால், அதேவேளையில் அங்கு தீய சக்திகள் இருக்கவும் வாய்ப்புள்ளது. ஏனென்றால் வெள்ளெருக்கில் இரண்டு வகை உண்டு. எனவே வெள்ளெருக்கு செடி எதற்கு அருகில் வளர்ந்துள்ளது என்பதை உற்றுநோக்கி, வெள்ளெருக்கு செடியின் வேரைக் கொண்டு விநாயகரை உருவாக்கக்கூடாது.

வெள்ளெருக்கு விநாயகரை வீட்டில் வைத்தால் இல்லம் முழுவதும் வெள்ளெருக்கு கதிர் வீச்சின் மூலம் வெள்ளெருக்கு விநாயகரின் மகிமையை உணரலாம். வெள்ளெருக்கு பட்டையை நூலுக்குப் பதில் விளக்குத் திரியாக போட்டு வீட்டில் ஏற்றினால் சகல பூதங்களும் விலகி ஓடும். வெள்ளெருக்கு வடவேரில் மணிமாலை செய்யலாம். சொர்ண கணபதி மந்திரம் சொல்லி, வெள்ளெருக்கு விநாயகரை வழிபட்டால், துன்பம் விலகி இன்பம் பெருகும். 

Tags : vinayakar vellerukku வெள்ளெருக்கு விநாயகர்

More from the section

தோகூரில் அருள்புரியும் மாவிலங்கேஸ்வரர்! 
ஸ்ரீ படேசாகிப் சுவாமிகள் மகா குருபூஜை
ஸ்ரீராகவேந்த்ர க்ரந்தாலயாவில் இரண்டாம் ஆண்டு பிரதிஷ்டை விழா
மாசி மாதப்படி நன்மை அடையும் ராசிக்காரர்கள் எவை? 
உங்கள் குழந்தைக்கு உபநயனம் செய்துவிட்டீர்களா? மாசிப்பூணூல் பற்றி ஜோதிடம் கூறும் ரகசியங்கள்!